Monday, September 10, 2007

சோனியா காந்திக்கு குறி வைத்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல்

காஷ்மீரில் சோனியாகாந்தி வரும் பாதையில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: பெண் போலீஸ் காயம்

காஷ்மீர், செப்.10-

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று பிற்பகல் பெண்கள் மாநாடு நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள் ளார். இதற்காக அவர் இன்று மதியம் ஸ்ரீநகர் சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை சோனியா செல்லும் பாதையில் காஷ்மீர் தீவிரவாதி கள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். தூரத்தில் இருந்து இயக்கி குண்டுகளை வெடிக்க வைத்து இந்த அதிரடி தாக்குதல் அவர்கள் மேற்கொண்டனர்.

ஸ்ரீநகர் அருகே உள்ள கதிதர் வாசா என்னும் இடத் தில் ரோட்டோரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. அந்த சமயத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. குண்டு வெடிப்பில் அந்த வாகனம் சிக்கியது.

வாகனத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காஷ்மீர் போலீசாரும், மத்திய ரிசர்வ் படை போலீசாரும் அந்த பகுதியை முற்றுகையிட்டு தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.

No comments: