Showing posts with label காஷ்மீரி இந்துக்கள். Show all posts
Showing posts with label காஷ்மீரி இந்துக்கள். Show all posts

Saturday, January 20, 2007

காஷ்மீரி இந்துக்களுக்கு ஆதரவாக என் குரல்

இதே நாள் 17 வருடங்களுக்கு முன்னர், ஜனவரி 19ஆம் தேதியன்று "காஷ்மீரை விட்டு இந்துக்களே வெளியேறுங்கள்" என்று முஸ்லீம்களால் துரத்தப்பட்டு ஜம்முவுக்கு குடிபெயர்ந்தார்கள்.










கடந்த 17 வருடங்களாக சொந்த தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வரும் இந்த காஷ்மீரி இந்துக்கள் இன்று தாங்கள் வெளியேற்றப்பட்டதை ஹோலோகாஸ்ட் தினமாக நினைவுகூர்ந்தார்கள்.

மசூதிகளின் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்ட "இந்துக்களே வெளியேறுங்கள்" அறிக்கையின் காரணமாக பயத்துடன் வெளியேறியவர்கள் தவிர்த்து ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்.

சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் இந்துக்கள் காஷ்மீரிலிருந்து ஜம்முக்கும் பல்வேறு இந்திய மாநிலங்களுக்கும் ஓடினார்கள்.

பானுன் காஷ்மீர் என்ற தனி மாநிலம் தங்களுக்கு வேண்டும் என்று இப்போது போராடி வருகிறார்கள்.

அவர்களுக்கு என் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.


http://www.earthtimes.org/articles/show/21952.html

பானுன் காஷ்மீர்

http://www.panunkashmir.org/

Auschwitz in Kashmir

போகாத இந்துக்களை கொல்ல நடந்த வந்தாமா படுகொலைகள்