Thursday, September 20, 2007

தென்காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அத்வானி அஞ்சலி

நன்றி தட்ஸ்டமில்

கொலையான இந்து முன்னணி பிரமுகர்கள் குடும்பத்தினர் அத்வானியுடன் சந்திப்பு
வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007


நெல்லை:

தென்காசியில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர்களின் குடும்பத்தினர் பாஜக தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்தனர். அவர்களுக்கு பாஜக சார்பில் ரூ 1 லட்சம் ரூபாயை முதல் தவணையாக அத்வானி வழங்கினார்.

நெல்லையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அத்வானி பங்கேற்றார்.

இந்நிலையில் தென்காசியில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் மற்றும் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட அவரது தம்பிகள் செந்தில், சேகர், சுரேஷ் ஆகியோரது குடும்பத்தினரை அத்வானியுடன் சந்திக்க வைக்க பாஜக மாநிலத் தலைவர் திட்டமிட்டனர்.

ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அத்வானியால் தென்காசி செல்ல முடியவில்லை. இதையடுத்து கொலையான 4 பேரின் மனைவிகள், மற்றும் குழந்தைகள், அவர்களது தந்தை சொர்ணதேவர் ஆகியோரை தாழையூத்துவிருந்தினர் மாளிகைக்கு பாஜக தலைவர்கள் வரவழைத்து அத்வானியுடன் சந்திக்க வைத்தனர்.

அவர்களுக்கு பாஜக சார்பில் ரூ 1 லட்சம் ரூபாயை முதல் தவணையாக அத்வானி வழங்கினார்.

அவர்களுக்கு அத்வானி ஆறுதல் கூறினார். இச் சந்திப்பை பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்க பாஜக தலைவர்கள் அனுமதிக்கவில்லை. கட்சியின் சார்பில் படம் தரப்படும் என கூறிவிட்டனர்.

முன்னதாக தென்காசி கலவரத்தில் கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் குடும்பத்தாரிடம் பாஜக சார்பில் ரூ 1லட்சம் நிவாரண நிதியை முதல் தவணையாக அத்வானி வழங்கினார்.

பாஜகவில் குமார் பாண்டியன் தந்தை:

அப்போது படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியனின் தந்தை அத்வானி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

குமார் பாண்டியனின் தந்தை சொர்ணத் தேவர் காங்கிரஸ்காரர் ஆவர். அவர் அத்வானி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் படுகொலை செய்யப்பட்ட குமார் பாண்டியன், செந்தில், சேகர், சுரேஷ் ஆகியோரது படங்களுக்கு அத்வானி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

No comments: