நன்றி தினமலர்
தமிழக முதல்வர் கருணாநிதி மற்ற மதங்களை பற்றி கருத்து கூற தயாரா? : பா.ஜ. கேள்வி
டில்லி : பா.ஜ.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, ராமர் குறித்து கருத்துக்களை கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி ஏனைய மற்ற மதத்தினரை பற்றி கருத்துக்களை கூறுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார். என்.டீ.டி.வி.க்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் கருணாநிதி நிலைபாடற்ற மனநிலையை கொண்டுள்ளார். ராமர் மற்றும் சேது சமுத்திர திட்டம் குறித்து வெளியிடும் அறிக்கைகள் அவரது முதல்வர் பதவியின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் உள்ளது. மேலும் இந்து மதத்தைப் பற்றியும், இந்து கடவுள்கள் பற்றியும் விமர்சித்து அறிக்கைகளை வெளியிடும் கருணாநிதி மற்ற மதத்தை பற்றி விமர்சிக்க முடியுமா? என அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment