Showing posts with label பார்வர்ட் பிளாக். Show all posts
Showing posts with label பார்வர்ட் பிளாக். Show all posts

Tuesday, February 05, 2008

கூட்டணி கட்சியினர் மீதே துப்பாக்கி சூடு நடத்திய மேற்கு வங்க ஆளும் சிபிஎம்

மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச் சூடு - 4 பா.பிளாக் தொண்டர்கள் பலி
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008



கூச் பெஹர்: மேற்குவங்க மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு வங்கம், கூச் பிகார் மாவட்டத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியின் விவசாயப் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரேஷன் வசதி மற்றும் வேலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவர்களை கலைப்பதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 8பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாளை பார்வர்ட் பிளாக் கட்சி 24 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி தட்ஸ்டமில்