Monday, September 24, 2007

அந்தமானில் பாஜக - தாமோதரன் வெற்றி - திமுக ஆதரவு

அந்தமானின் திமுக-பாஜக கூட்டணி!
திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007



போர்ட் பிளேர்

அந்தமானின் போர்ட் பிளேர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற தமிழ் வேட்பாளரான ஆர்.தாமோதரன் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானார்.

போர்ட் பிளேர் நகராட்சியில் மொத்தம் 18 தேர்வு பெற்ற கவுன்சிலர்களும், 3 நியமன கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு பாஜக ஆதரவுடன் ஆர்.தாமோதரன் போட்டியிட்டார்.

அவரது பெயரை திமுக கவுன்சிலர் ராஜா மருதவாணன் முன்மொழிந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் தாமோதரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற தாமோதரன் கூறுகையில் போர்ட் பிளேர் மக்களின் உயர்வுக்காக பாடுபடுவேன். போர்ட் பிளேர் நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வகை செய்வேன் என்றார்.

பின்னர் பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஷால் ஜாலி மற்றும் தாமோதரன் ஆகியோர் நகரின் முக்கியப் பகுதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

போர்ட் பிளேரில் திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதாதளமும் இணைந்துள்ளது.

நன்றி தட்ஸ்டமில்

1 comment:

Anonymous said...

வெகு விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக வெற்றி பெறும்.

அப்போது கூட ஆதரவு தரும் உதிரி கட்சியாக திமுக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!