Thursday, September 20, 2007

அனுமான் பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்த முஸ்லிம் மாணவி


அன்பு மார்க்கம் இறைமார்க்கம் ஆன்மீக மார்க்கத்துக்கு வருக என்றே அழைக்கிறோம்.

--
நன்றி தினமலர்
--
அனுமான் பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்த முஸ்லிம் மாணவி

வாரணாசி: ராமர் பாலம் குறித்த சர்ச்சை ஓயாத நிலையில், வாரணாசியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இந்து கடவுளான அனுமானை புகழ்ந்து பாடப்படும் பாடலை உருது மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

உ.பி., மாநிலம் வாரணாசியில் உள்ள சோனியா என்ற இடத்தைச் சேர்ந்த மிகவும் ஏழை நெசவுத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தவர் நஸ்னீன். இவரது வீட்டில் கல்வியறிவு பெற்ற ஒரே நபர் இவர் தான். "விஷால் பாரத் சன்ஸ்தான்' என்ற பொது நல அமைப்பில் நஸ்னீன் சமூக தொண்டராக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் அவரது தோழிகளான ரேஷ்மினா பர்வீன், நஜ்மா மற்றும் பர்சானா ஆகியோர் மத ஒற்றுமைக்காக தினமும் அனுமான் பாடல்களைப் பாடுகின்றனர். நஸ்னீனும், அவரது தோழிகளும் அனுமான் பாடல்களை பாடுவதற்கு, கடந்த ஆண்டு வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துõண்டுகோலாக அமைந்தது. "வாரணாசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, அமைதி மற்றும் மத ஒற்றுமைக்காக இந்து சகோதரர் களுடன் சேர்ந்து பாடுபட வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த அனுமான் சாலிசா பாடலை பாடிய போது, எங்கள் உடலிலும், உள்ளத்திலும் ஒருவித ஆன்மிக சக்தி ஏற்பட்டதை உணர்ந்தோம். அதன் பின்னர் தான், இந்து புனித நுõல்களை முஸ்லிம்களும் அறிந்து கொள்ள உருது மொழியில் மொழி பெயர்க்க தீர்மானித்தோம்' என்று அப்பெண்கள் நால்வரும் தெரிவித்தனர். நஸ்னீனின் இந்த முயற்சியை வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

"அனுமான் சாலிசா'வை அடுத்து, துளசிதாசர் எழுதியுள்ள "ராம சரித மானசம்' காவியத்தையும் உருதுவில் இவர்கள் மொழிபெயர்க்க உள்ளனர்

1 comment:

Anonymous said...

Welcome!