Sunday, September 16, 2007

இந்துக்கோவில் நிலத்தை காஷ்மீர் காங்கிரஸ் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஆக்கிரமிப்பு

கோவில் இடத்தில் கட்டடம் : குலாம் நபி ஆசாத் மீது புகார்

ஸ்ரீநகர் : காஷ்மீர் தால் ஏரிப் பகுதியில், இந்துக் கோவில் பகுதியில் முதல்வர் குலாம் நபி ஆசாத்துக்கு சொந்தமாக புதியக் கட்டடம் கட்டப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பிரமாண்டமானதும் இயற்கை எழில் கொஞ்சும் தால் ஏரி முக்கியமானது. இப்பகுதியில் கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரி எல்லையில் இருந்து ஆயிரம் மீட்டர் துõரம் வரை எந்த கட்டடமும் எழுப்பக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.


இந்த பகுதிக்குள் காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதிய கட்டடம் கட்டி வருகிறார். தால் ஏரிப் பகுதியில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்துக் கோவில் உள்ளது. இதன் அருகே 16 அறைகள் மற்றும் இரண்டு கருத்தரங்க அறைகள் கொண்ட விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே மற்றொரு மூன்று மாடிக் கட்டடமும் கட்டப்படுகிறது. இவை காஷ்மீர் முதல்வர் குலாம்நபி ஆசாத்துக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் உறுதி செய்தனர். கட்டடப் பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "கட்டடம் கட்டுவதில் விதிமீறல் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப் படும்' என்று ஏரி மற்றும் நீர்வழிகள் மேம்பாட்டு வாரிய துணைத் தலைவர் நசீம் தெரிவித்தார். ஆனால், நடவடிக்கை ஏதும் இன்றி கிடப்பில் போடப்படும் என்ற பேச்சும் அதிருப்தியும் அதிகரித்திருக்கிறது.

நன்றி தினமலர்

No comments: