முன்னாள் முதல்வரை கொல்ல சதி: காட்பாடியில் இருந்து கண்ணி வெடி மருந்து தீவிரவாதிகளுக்கு சப்ளை
வேலூர், செப். 9-
நெல்லூர் மாவட்டம் வித்யா நகரில் நேற்று முன்தினம் இந்த தாக்குதல் நடந்தது. இதில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஆனால் பின்னால் வந்த காரில் இருந்த 3 காங்கிரஸ் தொண்டர்கள் பலியானார்கள்.
குண்டு வெடித்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். கண்ணி வெடி சிதறல்கள் சிதறி கிடந்த மருந்துகள் ஆகியவற்றை சேகரித்து ஆய்வு செய்தனர்.
கண்ணி வெடியை தயாரிக்க `நைட்ரோ கிளிசரின்' என்ற மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மருந்து நக்சலைட்டுகளுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அது வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கடத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. காட்பாடியில் அரசுக்கு சொந்தமான வெடி மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் கிணறு, பாறை உடைக்க மற்றும் பட்டாசு தொழில்களுக்காகவும் சப்ளை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கி விற்பதற்காக ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் யாரோ ஒருவர் `நைட்ரோ கிளி சரின்' மருந்துகளை வாங்கி நக்ச லைட்டுகளுக்கு அனுப்பி உள்ளார்.
அவர் யார் என்பதை கண்டு பிடிக்க வேலூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்காக அனைத்து ஏஜெண்டுகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவர் கள் ஒவ்வொருவரையும் விசா ரித்து வருவதாக மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
கண்ணி வெடியில் காட்பாடி மருந்து இருப்பது உறு திப்படுத்தப்பட்டு இருப்ப தால் பெரிய அளவில் வெடி மருந்துகள் இங்கிருந்து நக் சலைட்டுகளுக்கு சப்ளை செய் யப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
நக்சலைட்டுகள் நேரடி யாக காட்பாடி வந்து வெடி மருந்துகளை ஏஜெண்டிடம் இருந்து வாங்கி சென்றார்களாப அல்லது ஏஜெண்டுகளே இங்கிருந்து கடத்தி சென்று சப்ளை செய்தார்களாப என்று தெரியவில்லை.
நக்சலைட்டுகள் இங்கு வந்து வாங்கி சென்றி ருந்தால் அவர்களின் ஆட் கள் காட்பாடியிலேயே பதுங்கி இருந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் காட்பாடி அல்லது வேலூரில் ரகசிய இடங்களில் இருக்கிறார்களாப எனவும் சோதனை நடக்கிறது.
ஏற்கனவே ஐதராபாத் குண்டு வெடிப்பில் தொடர் புடைய பெண் தீவிரவாதி ரப்ஜானி மற்றும் அவரது ஆட்கள் வேலூரில் தான் பதுங்கி இருந்தனர்.
இப்போது நக்சலைட்டு களுக்கும் இங்கி ருந்து தான் வெடி மருந்து சென்றிருப்பது தெரிய வந் துள்ளதால் வேலூர் போலீ சார் கடும் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
நன்றி மாலைமலர்
No comments:
Post a Comment