என் நண்பர் கிறிஸ்துமஸ் பரிசாக(?) எனக்கு அனுப்பி சமீபத்தில் படிக்க ஆரம்பித்த வலைப்பக்கம் இது
http://www.jesusneverexisted.com/
இயேசு என்று ஒருவர் இருந்ததில்லை என்று சாதிக்கிறது.
பழங்காலத்தில் உலவிய பல கதைகளை தொகுத்து உருவாக்கிய ஒரு கதை என்று சொல்கிறது.
நாசரத் என்ற ஊரே முதலாம் நூற்றாண்டில் இல்லை என்று ஆதாரத்துடன் நிறுவுகிறது.
12 அப்போஸ்தலர்களும் கற்பனையே என்று சொல்கிறது. ஆரம்பகால சர்ச்சுகளை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட கதைகள்தான் 12 அப்போஸ்தலர்கள் என்று கூறுகிறது. கன்னிமேரி சமாச்சாரமும் கிறிஸ்துவத்துக்கு போட்டியாக இருந்த மதங்களிடமிருந்து பெறப்பட்ட கற்பனையே என்று கூறுகிறது
200 வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்று கூறுகிறது. குறைந்தது எனக்கு இது புதிய விஷயம். இந்த ஏமாற்றுவேலையை ஷோ பண்ணி பணம் பண்ண ஒரு பெரிய தொழிலே நடந்துகொண்டிருக்கிறது என்றும் கூறுகிறது.
அலெக்ஸாண்டிரியாவில் தோன்றிய மதம் இந்த கிறிஸ்துவம் என்று கூறுகிறது. கத்தோலிக்க மதம் அதன் சடங்குகளை எகிப்திலிருந்து பெற்றது என்று கூறுகிறது.
பெர்ஷியாவிலிருந்து மித்ரா வழிபாடு கொடுத்த உடையை பூண்டு இந்த கலப்பு மதம் தோன்றியது என்றும் கூறுகிறது.
யூதர்களது வடக்கு ராஜ்யம் அழிந்ததும் அதனால் பாபிலோனில் வசிக்க நேர்ந்த யூதர்கள் உருவாக்கியதுதான் யூதக்கதைகள் என்றும் கூறுகிறது.
டேவிட் சோலமன் ஆகியோர் எல்லோரும் வெறும் கதைகளே என்றும் அவர்கள் உண்மையான வரலாற்று நபர்கள் அல்ல என்றும் கூறுகிறது.
கிறிஸ்துவத்துக்காக பொய் சொல்வதும் கிறிஸ்துவர்களுக்கு உகந்ததாம். அவர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள்தாம் அப்போஸ்தலர் ஆகியவை என்றும் கூறுகிறது.
கிறிஸ்துவ சர்ச்சில் நடந்த ஊழல்களையும் பொய் பித்தலாட்டங்களையும் காமக்களியாட்டங்களையும் பட்டியல் போடுகிறது.
எவ்வாறு கொடூரமான முறையில் கிறிஸ்துவம் பரப்பப்பட்டது, பரப்பப்படுகிறது என்றும் பட்டியல் போடுகிறது.
படிக்க ஆரம்பிக்கவில்லை.
படித்துவிட்டு என் விமர்சனத்தை எழுதுகிறேன்.