கவர்னரிடம் புகார் மனு அளிக்க பா.ஜ., முடிவு
சென்னை: சென்னை பா.ஜ., ஆபீஸ் தாக்கப்பட்டது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பா.ஜ., மாநில மூத்த தலைவர் எச்.ராஜா கூறியிருப்பதாவது: பா. ஜ., ஆபீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் பரிதி இளம் வழுதி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இவரையும் போராட்டத்தை தூண்டி விட்ட அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க., ஆட்சியை கலைக்க வலியுறுத்தி கவர்னரை சந்தித்து மனுக்கொடுப்போம் என்றார்
1 comment:
இது உண்மையானால் சான்றுகள் இருக்குமானால், பரிதி இளம் வழுதி மீதே ஏன் ஒரு கிரிமினல் கேஸ் பதிய முயற்சிக்கக் கூடாது? ஒரு PLI petition கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடாது? ஏன் கவர்னரிடம் போய் மனுக் கொடுக்க வேண்டும்? பாஜகவிற்கு ஏன் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவதே இல்லை? எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தால் என்ன? மேலும் டெலிவிஷனில் இந்தத் தாக்குதலைக் காட்டுகிறார்கள் என்றால் முன்னேற்பாடாகவோ அல்லது டெலிவிஷனுக்குத் தெரியும் அளவிலோதான் நடந்திருக்க வேண்டும். அப்போது ஏன் போலிஸ் மேல் கிரிமினல் கேஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யக் கூடாது?
Post a Comment