நன்றி தட்ஸ்டமில்
ரம்ஜான் நோன்பு விதிகளை மீறுவோரை பிடிக்க மலேசியாவில் தனிப் படை
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007
கோலாலம்பூர்:
ரம்ஜான் நோன்பு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களைக் கண்டுபிடிக்க மலேசியாவின் வடகிழக்கில் உள் கெலென்டான் மாநில அரசு தனிப்படையை அமைத்துள்ளது.
மலேசியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் நோன்பு தொடங்கியது.
நோன்புக் காலத்தில், பகல் நேரத்தில் சாப்பிடாமல், மது அருந்தாமல், புகை பிடிக்காமல், செக்ஸ் வைத்துக் கொள்ளாமல், மனதையும், உடலையும் கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது விதியாகும்.
இந் நிலையில் இந்த விதிமுறைகளை அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க கெலன்டான் மாநில அரசு புதிய படை ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த மாநில அரசை நிர்வகித்து வரும் இஸ்லாம் சே மலேசியா என்ற கட்சி 10 அதிகாரிகள் கொண்ட படையை நியமித்துள்ளது. சாதாரண உடையில் வலம் வரும் இந்த அதிகாரிகள், நோன்புக் காலத்தின்போது மது அருந்துவோர், புகை பிடிப்போர் மற்றும் சாப்பிடுவோரைப் பிடிப்பார்கள்.
உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள். இப்படி ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விதிகளை மீறியதற்காக தனிப்படையிடம் பிடிபடுவோருக்கு குறைந்தபட்ச அபராதமாக 20 ரிங்கிட் (அதாவது 6 டாலர்கள்) விதிக்கப்படும். உணவை விற்பவருக்கு 500 மலேசிய ரிங்கிட் (144 டாலர்கள்) அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் கட்சி மலேசியாவை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற கோரி வரும் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள். 20 சதவீதம் பேர் புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 10 சதவீதமாகும். இந்துக்கள் 6 சதவீதம் பேர் உள்ளனர்.
No comments:
Post a Comment