Showing posts with label கழக ஆட்சி சாதனை. Show all posts
Showing posts with label கழக ஆட்சி சாதனை. Show all posts

Saturday, September 29, 2007

அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை

அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை
தேனி: இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கக்கோரி அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை போராட்டம் நடந்தது. தேனி, காட்டுநாயக்கன்பட்டி டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளதாகக்கூறி, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பையா தலைமையில் ஆண்டிபட்டி, போடி, தேனி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் டீ கடைகளை முற்றுகையிட்டனர். எல்லா இனத்தவரையும் போல் அருந்ததியரையும் பெஞ்சில் உட்கார வைத்து டீ வழங்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான டம்ளரில் வழங்கவேண்டும் என கூறி டம்ளர்களை உடைத்தனர்.

Thanks
Dinamalar.