ஐதராபாத்தில் புனிதப்போர் என்ற பெயரில் நாசவேலைக்கு சதி- 2 வாலிபர்கள் கைது
நகரி, செப். 29-
ஐதராபாத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி 2 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 43 பேர் பலியா னார்கள். இச்சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நகரில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. போலீசார் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மாறு வேடத்தில் சென்று ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முகாராம் பாத் பகுதியில் உள்ள மதரசா மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சில வாலிபர்கள் `புனிதப்போர்' (ஜிகாத்) பிரசாரம் செய்து வருவது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முகமது அப்துல் மாசித் (வயது 19), மவுலானா (19) ஆகியோர் மாணவர்களிடம், "நம் நாட்டில் முஸ்லிம் மதத் திற்கு எதிராக செயல்படுபவர் களை `புனிதப்போர்' நடத்தி அழிக்க வேண்டும். இந்த புனிதப்போரில் பங்கேற்க வருவோருக்கு வெடிகுண்டு தயாரிப்பது, ஆயுதப்பயிற்சி அளிப்போம்'' என்று பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, "ஐதராபாத்தின் முக்கிய பகுதி களை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டி னோம். இந்த புனிதப் போரை தொடங்க முஸ்லிம் மாணவர் களை ஒன்று திரட்டி வந்தோம். அதற்குள் போலீசில் பிடிபட்டு விட்டோம்'' என்றனர்.
No comments:
Post a Comment