Monday, September 24, 2007

ஐதராபாத்தில் என் கூட்டாளிகள்தான் குண்டு வைத்தனர்-இஸ்லாமிய பயங்கரவாதி ரிஸ்வான் ஹாஜி வாக்குமூலம்

ஐதராபாத், செப். 22-

ஐதராபாத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி 2 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 43 பேர் பலியானார்கள். இது தொடர்பாக தீவிரவாதி ரிஸ்வான் ஹாஜியை போலீசார் கைது செய்தனர். அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் வங்காள தேசத்தில் உள்ள ஷிட்டகாங். எனது தந்தை ஜாஸ்னல். முஸ்லீம் மதத்தில் தீவிர பற்று கொண்டவர். இதனால் என்னை மதரசாவில் படிக்க வைக்க விரும்பினார். ஆனால் எனக்கு வங்காளதேசத்தில் உள்ள மதரசாவில் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து நான் கிழக்கு வங்காளத்தில் உள்ள மாமா முகைதீன் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள மதரசாவில் படித் தேன்.

பின்னர் உருது, அரேபிக் மொழி படிப்பதற்காக விசா, பாஸ்போர்ட் இல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் பகுதிக்கு வந்தேன்.

அதன் பிறகு தான் ஐதரா பாத்தில் உள்ள கயத்நகருக்கு வந்தேன். அந்த சமயத்தில்தான் எனது சகோதரி சாகி ரப்சஞ்சானி வேலூரில் உள்ள கல் லூரியில் சேர்ந்தாள். அதன் பிறகு அவளைப் பார்க்க அங்கு அடிக்கடி சென்று வந்தேன்.

நான் ஐதராபாத்தில் தங்கி இருந்த போது வங்காள தேசத்தை சேர்ந்த கலீல், முஸ்லியுதீன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

முஸ்லியுதீன் எனக்கு நிறைய பண உதவி செய்தார். சில நாட்களுக்கு பிறகுதான் அவர் `பூஜி' தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் எனக்கு `ஜிகாத்' பற்றி சொல்லிக் கொடுத்தார். பின்னர் எனக்கும் அதில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது.

நானும் ஐதராபாத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் `ஜிகாத்' பற்றி பிரசாரம் செய்தேன். `பூஜி' இயக்கத்தில் இளைஞர்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டேன்.

அப்போதுதான் முஸ்லி ïதீன் என்னிடம் ஐதராபாத் தில் காஷ்மீரைப் போல் புனிதப்போர் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் புனிதப் போருக்காக பெட்ரோல் குண்டு தயாரித்தார். நான் அவருக்கு பெட்ரோல் வாங்கி கொடுத் தேன்.

ஆனால் கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி எனக்கு எதவும் தெரியாது. அந்த குண்டு வெடிப்பை கலீலும், முஸ்லியாதீனும்தான் நடத்தி இருக்க வேண்டும். அந்த குண்டு வெடிப்புக்கு பிறகு 2 பேரும் மாயமாகி விட்டார்கள். அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது.

இவ்வாறு அவன் கூறினான்.

நன்றி மாலைமலர்

1 comment:

கால்கரி சிவா said...

பாவம்யா அவரு...விட்டிருங்க...