Monday, September 24, 2007

இன்னமும் சாதி உணர்வு போகாத திமுக பேச்சாளர்கள்

நன்றி தட்ஸ்டமில்

'கூறு கெட்ட கோவாலு'-திமுக சிறப்பு பட்டம்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007


கரூர்:

கரூரில் இன்று திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ, சரத்குமார், விஜயகாந்த் ஆகியோருக்கு சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.

கரூரில் இன்று திமுக சார்பில் பாஜகவையும், விஎச்பியையும் கண்டித்து கரூர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு கரூர் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாலர் பரமத்தி சண்முகம் பேசியதாவது,

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் விதமாக பேசிய வி.எச்.பிகாரனை ரோட்டில் நடமாட விடக்கூடாது. இந்தப் பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அண்ணா பெயரை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்தும் ஜெயலலிதா, திமுகவை கண்டிக்கிறார். ராமர் உண்டா, இல்லையா என்பதை அண்ணா எழுதிய நூல்களை படித்துப் பார், அப்போது புரியும்.

இவர் தான் இப்படி என்றால் கூறுகெட்ட கோபாலுக்கு (வைகோ) என்ன வந்தது. அவர் போய் பாஜக அலுவலகத்தில் பார்த்து ஆறுதல் சொல்கிறாராம்.

கோமாளி விஜயகாந்துக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும். அவர் எல்லாம் அண்ணாவைப் பற்றி பேசுகிறார். சரத்குமாருக்கு (அவரது சமூகத்தை குறிப்பிட்டு) என்ன கேடு, அவர் ஏன் இப்படி அப்படி பேசுகிறார்.

முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நாடார்களை உள்ளே விட மாட்டார்கள். அந்த அளவுக்கு ஜாதி வெறி தலைவிரித்து ஆடியது. அதை உடைக்க பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எப்படி பாடுபட்டார்கள் என சரத்குமார் தனது அம்மா, அப்பாவிடம் போய் கேட்டுப்பார்த்தால் தெரியும்.

இவர் எல்லாம் 4 ஓட்டு வாங்கி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் என்றார்.

வாசுகி முருகேசன் பேசுகையில், சென்னையில் நமது தோழர்கள் செய்தது (பாஜக அலுவலகம் மீதான தாக்குதல்) குறைவு என்றார்.

இதன் பின்பு பாஜக மூத்தத் தலைவர் அத்வானியின் உருவ பொம்மையை திமுகவினர் எரித்தனர்.

No comments: