முஸ்லிம் பயங்கரவாத அமைப்புடன் உல்பாவுக்கு நெருங்கிய தொடர்பு
புதுடில்லி: அசாமில் பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டு வரும் உல்பா, வங்கதேசத்தில் செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாத் இஇஸ்லாமி பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து கொண்டு தற்கொலை படை தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்க நிபுணர் ஸ்டார்ட்பார் இது குறித்து கூறியதாவது: முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு "அவுட்சோர்சிங்' முறையில் தற்கொலை படை தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களை நடத்தி வரும் அளவுக்கு உல்பா அமைப்பின் செயல்பாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஹர்கத் அமைப்பு தான் காரணம். இந்த அமைப்புடன் உல்பா கைகோர்த்து கொண்டுள்ளது. இது தவிர பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடனும் உல்பாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. உல்பா தவிர இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் பிற பயங்கரவாத அமைப்புகளுடனும் ஹர்கத் அமைப்புக்கு தொடர்பு உண்டு. உல்பாவின் செயல்பாடுகள் இந்தியாவின் வடகிழக்கு பகுதியின் மையமாக கொண்டே உள்ளது. இருப்பினும், அதன் நிதி திரட்டும் பிரிவுக்கு முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டு. இது இந்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விஷயம். இதை நீண்ட நாட்களுக்கு இந்திய அரசால் கவனிக்காமல் இருக்க முடியாது.இவ்வாறு ஸ்டார்பார் கூறினார்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment