Wednesday, April 27, 2011

மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கு :ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கு :ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு


திருநெல்வேலி : மதுரை இந்துமுன்னணி தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 தடா கைதிகள் பலத்த பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மதுரை இந்துமுன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை திலகர் திடல் போலீசார், தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாகுல் ஹமீது, அப்துல்அஜீஸ், சுபைதார், ஜாகிர் உசேன், சீனிநயினா முகமது, ராஜா உசேன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் சீனிநயினா முகமது மட்டும் ஜாமீனில் வெளியில் உள்ளார். மற்ற கைதிகள் சென்னை, கோவை, திருச்சி, பாளை.,மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் (தடா) நேற்று நடந்தது. நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் கைதிகள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த இரு நாட்களாக அரசு தரப்பு விவாதம் நடந்தது. அரசு தரப்பில் ஏற்கெனவே 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 72 சான்று ஆவணங்களும், 13 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எதிர்தரப்பு விவாதம் நடத்துவதற்காக வரும் ஜூன் மாதம் 9ம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாகிர் உசேன்,""கோவையில் உள்ள தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 3 நாட்கள் பரோலில் விடும்படி'' கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி விஜயராகவன் ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.

ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பிட்டர் கைது. பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்கிய கருணாநிதி முதல்வரா?

ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பிட்டர் கைது. பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்கிய கருணாநிதி முதல்வரா?

ரூ.1000 லஞ்சம் வாங்கிய பிட்டர் கைது

சிவகங்கை : 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பிளம்பரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் பிட்டராக பணிபுரிபவர் தொண்டிராஜா. இவர் காரைக்குடி நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் காரைக்குடியை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க 1000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதனையடுத்து கணேசன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதன் படி தொண்டிராஜா அவரது வீட்டில் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.

Monday, April 25, 2011

2012 இல் உலகம் அழியப்போகிறது என்று பயமுறுத்தி மத மாற்றம் செய்த பாதிரிகள் கைது

இந்த மாதிரி 25 வருடத்துக்கு ஒருமுறை உலகம் அழியப்போகிறது என்று பயமுறுத்தி பயமுறுத்தி மதம் மாற்றுவதை கிறிஸ்துவ பாதிரிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்து வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவே இப்படி பயமுறுத்தி மதமாற்றுவதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். அதனைத்தான் இன்றும் பாதிரிகள் பின்பற்றுகிறார்கள்.


மாற்கு 9.1. அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
And he said unto them, Verily I say unto you, That there be some of them that stand here, which shall not taste of death, till they have seen the kingdom of God come with power.

என்னமா ஏமாத்துறாங்க!

ஆனால், ஏமாற்று பாதிரிகள் மட்டும் விடவே மாட்டார்கள். தமிழர்களே ஜாக்கிரதை.


5 priests promise Palghar tribals protection from the 2012 ‘apocalypse’, saying only Christians living in Israel will surviveFive priests from Vasai converted hundreds of tribals from Devkhop village near Palghar to Christianity, saying the world will come to an end in 2012, and only those living in Bethlehem Jesus Christ’s birthplace will survive.

William Dias, Santa D’Souza, Alphonso Dabre, Simon John D’Souza and Solomon Shinde, all parish priests, were arrested on Thursday from Devkhop, around 11 km from Mumbai.

They told the tribals who had converged in the village that within a matter of minutes, they would vanish, only to reappear in Bethlehem, Israel.

Families of the tribals alerted the police, and the priests, along with their aide Hari Wadhan, were arrested.

Police said preliminary investiga-tions revealed the tribals were misled to ensure they convert to Christianity, and the priests didn’t take any money from them. However, many tribals sold their lands and cattle, thinking those would be of no use in Bethlehem.

Palghar resident Ashok Bhole, who along with activist Parag Gharat accompanied the tribals’ families to the police station, said the priests were “brainwashing” the tribals for the past 10 days.

“These are poor people, many of whom have not stepped out of their village in decades. They were promised trips to a foreign land (Bethlehem) and cash,” he said.

Inspector Popatrao Pawar from Palghar Police Station said, “The situation was tense as tribals’ families stoned the bus that the priests had sent for the converts. The priests, and Hari Wadhwan have been arrested.”

Gharat added, “A lot of tribals sold their land and cattle, which alerted their families. We suspect the priests hypnotised the tribals.”

Recently, the State government had ordered District Superintendent of Police (Thane Rural) Vishwas Nangre Patil to inquire into allegations of large-scale conversions of tribals to Christianity in Thane district.

There were complaints that tribals were lured by cash and gifts, and the Thane Rural Police had submitted a report to the State denying such conversions.

கனிமொழிக்கு ஆப்படித்து தயாளுவை தப்பிக்க வைத்த கருணாநிதி

கனிமொழி மீது கருணாநிதிக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. சமீபத்தில் கலைஞர் டிவி வழக்கில் கனிமொழியை மட்டும் ஜெயிலில் போடப்போகிறார்கள். ஆனால், 60 சதவீத பங்கு கொண்ட தயாளு அம்மாளை (அதான் கருணாநிதியின் முதல் சம்சாரம்) விட்டுவிட்டார்கள். கனிமொழிக்கு 20 சதவீத பங்குகள்தான் கலிஞர் டிவியில் இருக்கிறது. ஆனால் கனிமொழிக்கு களி.

என்ன காரணம் என்று சிபிஐ சொல்கிறது தெரியுமா?

கனிமொழிதான் ராஜாவுக்கு வக்காலத்து வாங்கினார், அவர்தான் 2ஜி களவாடிய பணம் கலிஞர் டிவிக்கு போகும் படி செய்தார். ஆனால் தயாளு அம்மாவுக்கு ஆங்கிலம் பேசவும் தெரியாது. கலிஞர் டிவி பங்குகளுக்காக எந்த கையெழுத்தும் போடவும் இல்லை என்று சிபிஐ சொல்கிறது.

கலிஞர் கருணாநிதி எப்படி ராஜாத்தி அம்மாளை கவிழ்த்து தயாளு அம்மாவை காப்பாற்றியிருக்கிறார் பார்த்தீர்களா? இதுக்குத்தான் சூப்பர் டூப்பர் மூளை என்று கரிணாநிதியை சொல்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், கரினாநிதியின் பங்குதான் தயாளு பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே கரினாநிதியைத்தான் கைது செய்யவேண்டும். அதுதான் சரியானதும் கூட.

அது நடக்குமா?

எப்படியே தயாளு அம்மாள் வணங்கும் சாய்பாபா, இறந்த பின்னால்கூட தயாளு அம்மாளை காப்பாற்றியிருக்கிறார்.

தெய்வீக பாரம்பரியத்தை வைத்து ஆபாச அரசியல் நடத்தும் கருணாநிதி

பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை

கருணாநிதி கதை வசனம் எழுதி வெளிவந்திருக்கும், "பொன்னர் - சங்கர்' படத்திற்கு, சில அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காரணம், கொங்கு மக்கள் குலதெய்வமாக வழிபடும் பொன்னர் - சங்கரின் வரலாற்றை திரித்து, சினிமாவுக்காக, வியாபார நோக்கத்தோடு, ஆபாசமாகவும், கொச்சைப்படுத்தியும் எடுத்திருப்பதாக, புகார் எழுந்துள்ளது.
இக்கதையை நாவலாக, 25 ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி எழுதிய போது, அது சம்பந்தப்பட்ட மூல நூல் மற்றும் முக்கிய தகவல்களை கொடுத்து உதவியவர், கவிஞர் சக்திகனல். இவர், இக்கதை ஒரு வார இதழில் தொடர்கதையாக வந்தபோதே, அதன் மூலக்கதையை சிதைத்து மிகைப்படுத்தி, எழுதி விட்டதாக குற்றம் சாட்டினார்.இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இக்கதை சினிமாவாக எடுக்கப்பட்டு இருப்பதால், பிரச்னை மீண்டும் வெடித்திருக்கிறது. அவரை சந்தித்தபோது... அண்ணன்மார் சுவாமி கதையைஎப்போது எழுதினீர் கள்?என் படைப்புகளில், அண்ணன்மார் சுவாமி கதையும், தீரன் சின்னமலை காவியமும் முக்கியமானவை. இவை இரண்டும் கொங்கு மக்களின் கலாசாரம் மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்தக் கூடியவை.
இதில், அண்ணன்மார் சுவாமி கதையை, என் தந்தை அரும்பாடுபட்டு, ஏட்டுப்பிரதியில் இருந்து குறிப்புகள் எடுத்து எழுதி, கையெழுத்து பிரதியாக வைத்திருந்தார்.நான், மணப்பாறை அருகில் உள்ள தரங்கம்பாடியிலிருந்த, ராஜலிங்க பண்டிதர் என்பவர் வைத்திருந்த ஏடுகளில் இருந்து குறிப்பெடுத்து எழுதி, அவற்றோடு பல தகவல்களை சேர்த்து, 1971ல் புத்தகமாக வெளியிட்டேன். பொன்னர் - சங்கர் கதைக்கு எழுத்து வடிவில் உள்ள மூல நூல் இதுதான்.
பொன்னர் - சங்கர் கதை பற்றி?சுப்புலட்சுமி ஜெகதீசன் என் உறவினர். அவர்தான், கருணாநிதி இக்கதையை விரிவுபடுத்தி நாவலாக எழுத விரும்புவதாக கூறி, அவரிடம் அழைத்துச் சென்றார். பவானி குமாரபாளையம் விருந்தினர் மாளிகையில் சந்தித்து, என் நூலையும், அது சம்பந்தப்பட்ட குறிப்புகள், கோவை வானொலியில் பூளவாடி பொன்னுச்சாமி பாடிய உடுக்கையடி பாடல், "கேசட்' ஆகியவற்றை கொடுத்தேன்.அதை வைத்து, ஒரு வார இதழில், பொன்னர் - சங்கர் தொடர்கதையை, கருணாநிதி எழுதினார். ஆனால், உண்மைக் கதைக்கு மாறாக, கற்பனை கலந்து, மிகைப்படுத்தி எழுதிவிட்டார். அது மட்டுமல்ல, அதை தன் சொந்தக்கதை போல விளம்பரப்படுத்தியும் வருகிறார்.மிகைப்படுத்தி என்றால்... எந்த அளவுக்கு?பொன்னர் - சங்கர் கதை, மன்னர் பாரம்பரிய வரலாற்று காவியம் அல்ல; அது ஒரு நாடோடி இலக்கியம். "குன்றுடையான் கதை' என்றும், அண்ணன்மார் சுவாமி கதை என்றும் அழைக்கப்படும் கர்ண பரம்பரை கதை.கொங்கு வேளாளர் குடும்பத்துக்குள் நடந்த பங்காளிச் சண்டை, காலப்போக்கில் பெரும் பகையாக முற்றி, வேளாள கவுண்டர்களுக்கும், வேட்டுவ கவுண்டர்களுக்கும் இடையில் இனக்கலவரமாக மாறியது. அவர்களுக்குள் நடந்த போரில், பொன்னர் - சங்கர் போராடி உயிர் துறந்தனர்.இதுதான் உண்மைக்கதை. ஆனால், மன்னர் சாம்ராஜ்ய வரலாறு போல கருணாநிதி மிகைப்படுத்தி இருக்கிறார். அதோடு, கொங்கு பண்பாட்டையும், தெய்வ வழிபாட்டையும் திரித்து எழுதியிருந்தார்; அப்போதே, எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம்?
எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஓய்வாக இருந்தார். கொங்கு மக்கள் மத்தியில், அப்போது தி.மு.க., செல்வாக்கு இழந்திருந்தது. "அவர்களின் ஆதரவை பெற வேண்டும்' என்ற நோக்கத்தோடு, 1984-88 கால கட்டத்தில், பொன்னர் - சங்கர் கதையை, தொடர்கதையாக எழுதத் தொடங்கினார்.மூலக்கதையின் தெய்வீக தன்மையை மாற்றி, நாத்திக கருத்துகளை புகுத்தி விட்டார். இப்போது, இதை படமாக எடுத்திருப்பதும் அரசியல் உள்நோக்கம் தான்.இது தவிர வேறு என்ன உதவி செய்தீர்கள், அதற்கான சன்மானம் உங்களுக்கு கொடுக்கப்பட்டதா?
இந்த கதையை அவர் எழுதிக் கொண்டிருந்த போது, தொடர் வெளியான வார இதழ் ஆசிரியர், பாவை சந்திரன், சிலம்பொலி செல்லப்பன் போன்றோர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்காக சந்தேகங்கள் கேட்பர். அது சம்பந்தப்பட்ட தகவல்களை சொல்வேன். இதற்காக, எனக்கு எந்த சன்மானமும் கொடுக்கவில்லை; நானும் கேட்கவில்லை.நம் படைப்பு மக்களுக்கு போய் சேர்ந்தால் போதும் என்று நினைத்தேன். புத்தகமாக வெளி வந்தபோது, அதன் முன்னுரையில் என் பெயரை ஒரு வரி குறிப்பிட்டிருந்தார், அவ்வளவு தான்.பொன்னர் - சங்கர் படத்திற்கு, சில அரசியல் அமைப்புகள், ஜாதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதே?
அவர்களின் எதிர்ப்பு நியாயமானது. கருணாநிதி கதை வசனத்தில், வெளி வந்திருக்கும் இந்தப் படத்தில், பொன்னர் - சங்கரை படு ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் சித்தரித்து, கொங்கு மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர். கடவுள் நம்பிக்கையையும், கொங்கு கலாசாரமும் சீரழிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான அண்ணன்மார் சுவாமி கதை இல்லை. இதில், பொன்னர் - சங்கர் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர், இரண்டு பெண்களுடன் கும்மாளம் போடுவது போன்ற காட்சிகளும், இன்னும் சொல்லக்கூசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பொன்னர் - சங்கர் இருவரும் திருமணம் ஆனவர்கள் என்றாலும், மனைவியர் மேல் கைவிரல் கூட படாமல், துறவு வாழ்க்கையில் இருந்தவர்கள்.இந்த காட்சிகளை பார்க்கும் போது, மூலக்கதையை எழுதியவன் என்ற முறையில் என் மனம் வேதனைப்படுகிறது. குலதெய்வமாக வணங்கும், கொங்கு மக்களின் மனம் வேதனைப்படாதா?விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொன்னர் - சங்கரை தலித் சகோதரர்கள் என்று குறிப்பிடுகிறாரே ?இது தவறான கருத்து. பொன்னர் - சங்கர் கடவுளாக பாவித்து வணங்கப்பட்ட பிறகு, பல சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்; அதில் தவறில்லை. ஆனால், தலித் சகோதரர்கள் என்று குறிப்பிடுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?பொன்னர் - சங்கர் வாழ்ந்த காலத்தில், இதுபோன்ற ஜாதி குறித்த ஏற்றத்தாழ்வுகள் இல்லை. கரூரைச் சேர்ந்த பரணன் என்பவர், "கரூர் மாவட்ட வரலாற்று சங்கம்' என்ற நூலில், இது போன்ற சர்ச்சைக்குரிய தவறான கருத்துகளை எழுதியிருக்கிறார். அதற்கான எந்த ஆவண குறிப்பும், குன்றுடையான் கதைப்பாடல்களில் இல்லை. வையமலை சாம்புவன் என்ற தளபதியை பற்றி குறிப்புகள் உள்ளன. ஆனால், இவர் பொன்னர் - சங்கருடன் இருந்த முக்கிய படைத்தலைவராக இருந்திருக்கிறார். பல சமூகத்தவர்கள் பொன்னர் - சங்கருக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர், அவ்வளவுதான். அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது சரியல்ல.துறவறம் ஏன்?
மலைக்கொழுந்து கவுண்டரின் மகள் தாமரை. இவளுக்கு மணம் முடிக்க தந்தை வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால், தாமரை தன்னுடைய தாய் மாமன் குன்றுடையானை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவன் ஏழை என்பதால், மலைக்கொழுந்து கவுண்டர் ஏற்க மறுக்கிறார். தந்தை சொல்லை மீறி, தாமரை தன் தாய் மாமனை மணக்கிறாள். அதை, ஏற்றுக்கொள்ளாத மலைக்கொழுந்து கவுண்டர், ஊரை விட்டே விரட்டுகிறார். இதனால், ஆத்திரமடைந்த தாமரை, தன் தந்தையை எதிர்த்து சபதமிடுகிறாள். "எனக்கு இரண்டு வீரமகன்கள் பிறப்பர்; அவர்கள் இருவரும் உன்னுடைய பேத்திகளை மணம் முடித்து, குடும்ப வாழ்க்கை வாழாமல், வாழா வெட்டியாக்கி சிறையில் அடைப்பர்' என்கிறாள்.
தாமரையின் சபதப்படி, பொன்னர் - சங்கர் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள், வளர்ந்து தன் தாயின் சபதத்தை நிறைவேற்ற, மலைக்கொழுந்து கவுண்டருக்கு எதிராக போரிட்டு, மலைக்கொழுந்தின் பேத்திகளான முத்தாயி, பவளாயி ஆகிய இருவரையும் மணம் முடித்து, சிறையில் அடைத்து, தன் தாயின் சபதத்தை நிறைவேற்றுகின்றனர்.மணம் முடித்த பிறகும் இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் பிரம்மச்சாரிகளாகவே இருக்கின்றனர். இறுதி யுத்தத்தில், பொன்னரும் - சங்கரும் இறக்கின்றனர்.-நமது நிருபர்-

Friday, April 22, 2011

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

முகப்பு » இந்து மத விளக்கங்கள், கேள்வி-பதில், பிறமதங்கள்

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?

பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.
இது வெறுமே பரந்த மனப்பான்மை எனக்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ பெரும்பாலான இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.
ஆகவே, பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணிகோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. அருகே இருக்கும் மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.
nagore-durgah
ஆனால், நம் இந்து மக்களுக்கு நாகூர் தர்காவை பற்றி முஸ்லீம்களிலேயே ஒரு சாரார் என்ன கருதுகிறார்கள் என்று தெரியாது. அதே போல வேளாங்கண்ணி கோவிலுக்கு தமிழக கிறிஸ்துவர்களிலேயே கணிசமான அளவு கிறிஸ்துவர்கள் போகமாட்டார்கள் என்பதும் தெரியாது.
நாகூர் தர்கா ஒரு சூஃபி தர்கா. தர்கா என்பதே இஸ்லாமுக்கு முரணானது என்று தீவிர இஸ்லாமியர்களான வஹாபிஸ்டுகள் கருதுகிறார்கள். தர்காக்களுக்கு செல்லும் முஸ்லீம்களை கப்ரு வணங்கிகள் என்று இழிவாக குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தனி அரசியல் கட்சிகளும் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகள், அமைப்புகளாக பீப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தவஹீத் ஜமாத் ஆகியவற்றை குறிப்பிடலாம். மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஜவஹிருல்லா என்பவர் ஒரு வஹாபியிஸ்ட் இஸ்லாமியர். சிமி என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது. முஸ்லீம்களில் செல்வாக்குடன் இருக்கும் ஜெயினுலாபுதீன் என்பவரும் இவரும் முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான். அதாவது தர்கா ஆகியவை அழிக்கப்பட வேண்டும், கந்தூரி, சந்தனக்கூடு போன்ற தமிழ்நாட்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அழிக்கப்பட வேண்டும் ஆகியவற்றை இவர்கள் கூறுகிறார்கள். ஜெயினுலாபுதீன் இந்த முறை திமுக கட்சிக்கு ஆதரவளித்திருக்கிறார். இருவருக்குள் வேறுபாடு என்பது யார் மிகத்தீவிரமாக வஹாபியிஸ்ட் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான். உதாரணமாக தமிழ்நாட்டில் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்தித்துகொள்ளும்போது வணக்கம் சொல்லுவது இயல்பு. ஆனால், இவர்கள் அப்படி வணக்கம் கூட சொல்லமாட்டார்கள். ஜெயினுலாபுதீன் பத்து லட்சம் முஸ்லீம்களை கூட்டி மாநாடு நடத்துவதாக கூறிக்கொள்கிறார். ஆகவே இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிறு பிரிவினர் அல்ல.
பாகிஸ்தானில் இப்படிப்பட்ட தர்காக்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். மனித வெடிகுண்டாக உடல் முழுவதும் குண்டுகளை கட்டிகொண்டு இந்த சூபி வணக்கத்தலங்களில் நுழைந்து அங்கு கும்பிடுபவர்களை கொல்வதில் சந்தோஷமடைகிறார்கள். இப்படிப்பட்ட வணக்கதலங்களில் கும்பிடுபவர்கள் முஸ்லீம் என்று பெயரிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டிய காபிர்களே என்பது வாஹாபி சிந்தனை. ஆகவே இப்படி மனித வெடிகுண்டாக சென்று தர்காக்களில் வழிபடுபவர்களை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்வதற்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் விரும்பி வருகிறார்கள் [1].
தமிழ்நாட்டில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த அமைப்புகளையே சார்ந்திருக்கிறார்கள் என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. கோயம்புத்தூரில் குண்டு வைத்தது இஸ்லாமிய இயக்கங்களுக்கு பின்னடைவு என்று ஜெயினுலாபுதீன், ஜ்வஹரில்லா ஆகியோர் கருதுகிறார்கள். வன்முறை தவறு என்பதல்ல. வன்முறையை கைக்கொண்டால், இஸ்லாம் மதத்தை தமிழர்கள் மத்தியில் இப்போது பரப்ப முடியாது என்பதுதான் காரணம் என்று இவர்களே எழுதுகிறார்கள் [2]. ஆகையால் தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.
இதெல்லாம் புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசலும் ஒரு சிவன் கோவில்தான் [3]. அதனை முஸ்லீம்களே இங்கு பதிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பரம்பொருளான எம்பெருமானுக்கு இவர் முஸ்லீம் இவர் இந்து இவர் கிறிஸ்துவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. தன்னிடம் எந்த ரூபத்தில் என்ன குரலில் என்ன மொழியில் கேட்டாலும் அருள்பவர் எம்பெருமான்.
அதே போல, வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில் ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்கள், பெந்த கொஸ்தே கிறிஸ்துவர்கள், பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். ஆனால், எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.
இதுவரை படித்ததிலிருந்தே பெரும்பாலான இந்துக்கள் எல்லா கோவில்களிலும் தெய்வங்களை பார்க்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.
இந்துக்கள் சைவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வைணவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவதுபரம்பொருளே என்பது உண்மையே.
shiva-familyஆனால், மனித மனம் என்பதன் மூலமே பரம்பொருளை நாம் வழிபடுகிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மனித மனத்தின் வழியே நாம் வழிபடுவதால், மனித மனம் உருவாக்கும் பிம்பங்களின் மூலமாகவே இறைவனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக அமமையும் அப்பனும் அழகாக உடை தரித்து, அழகான நந்தியின் அருகே, மங்களகரமான கோலத்தில் முருகனும் விநாயகனும் அருகருகே அமர்ந்திருக்கும் சந்தோஷமான காட்சியை நாம் பார்க்கிறோம். இதே போல, ராமனும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க உற்றார் உறவினர் புடைசூழ இருக்கும் பட்டாபிஷேக காட்சியைப் பார்க்கிறோம். இது நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இது போல நாமும் குடும்பசகிதமாக நன்றாக வாழவேண்டும் என்ற கருத்தை ஆழ்மனத்தில் விதைக்கிறது. நம் செயல்களில் வெளிப்படுகிறது. நம் சொந்தத்தினரை கருணையுடனும் பாசத்துடனும் அணுகவும் நம்மை தூண்டுகிறது.
ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை செய்யப்படும் காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். அப்படி எரிந்து விழவில்லை என்றாலும் துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம். அவ்வளவுதான். பார்க்கும் உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?
nadukalஇதே போலத்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும். அவை நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அதனால் தான், அகால மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தியடைய தமிழ்நாட்டிலும், இன்னும் பல புராதன கலாச்சாரங்களிலும் அவர்களை நடுகல்லாக அமைத்து நினைவுத்தூண் எழுப்பும் பழக்கம் உண்டு. தவறு செய்யாதிருந்தும், தவறாக தண்டனை அடைந்து இறந்தவன் (உதாரணமாக கோவலன் போன்று), பசி காரணமாகவோ அனாதையானதாலோ இறந்த பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஐந்நூறு ஆண்டுகளாக ஆவியாக சுற்றுவார்கள் என்பது பழங்கால ஐதீகம். ஆகவே அவர்கள் தங்களது துன்பத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பார்கள் என்று கருதி அவர்களை திருப்திப் படுத்த அவர்களுக்கு சிறு கோவில் கட்டி அவர்களுக்கு உணவு போன்றவற்றை அளிப்பது மரபு. ஆனால், இவர்களை வீட்டில் வைக்கமாட்டார்கள். வெளியே காட்டில், அல்லது அனாமத்தான இடங்களில்தான் அமைப்பார்கள். இவர்களை மட்டுமல்ல, நற்சாவு அடைந்தவர்களாக இருந்தாலும், இறந்து போன நிலையில் புகைப்படம் எடுத்ததை வீட்டில் வைக்கமாட்டார்கள். ஏன், கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அப்படி வரைந்திருந்தாலும் வீட்டில் வைத்து வணங்கமாட்டார்கள். சந்தோஷமான நிலையில் இருக்கும் புகைப்படங்களையே வீட்டில் வைத்து மூத்தார் வழிபாடு செய்யவேண்டும்.
தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.
எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.
images-of-jesus-christஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும். இதே போல இஸ்லாமில் ஷியா பிரிவினரும் முகம்மதின் மருமகனான அலி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு இப்போதும் அழுவார்கள். தங்கள் துயரத்தை வெளிக்காட்ட நெஞ்சில் அடித்துகொண்டும், சவுக்கில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக செல்வார்கள்.
இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியேவன்முறையாகவும் கோபமாகவும் வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.
பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.
இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.
இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.
பார்க்க:
கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை
- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
christian_serviceஇப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.
கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் [4]. ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால், கத்தோலிக்க சர்ச் திவாலாகிவிடும் என்று கருதுகிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு சர்ச், பெந்த கொஸ்தே சர்ச் என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் தினசரி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிகொண்டிருந்த பாதிரியார்கள், குற்றங்களுக்காக கேவலப்படும்போது சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!
இந்த கிறிஸ்துவ சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றனஎன்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.
bazooka_jesus_christianity_inquisitionஉலகத்தில் பெரும் போர்களை செய்த கிறிஸ்துவர்கள் செல்லும் இடமெங்கும் இனப்படுகொலையையும் ரத்த ஆறறையும் ஓட வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த பழங்குடியினரை கொடூரமான முறைகளில் கொன்றார்கள் [5]. ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை பைபிள் சொல்கிறது என்பதற்காக அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள் [6]. இவையெல்லாம் பைபிளும் இயேசுவும் அவர்களிடையே உருவாக்கிய மன விகாரங்களால் உருவானவையே. ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே.
இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே?
முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.
எம்பெருமான் துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
இன்பம் தரும் இறைவடிவத்தை, கல்யாண திருக்கோலத்தை, வீட்டில் அமர்த்தி இத்தெய்வீகப் பாடல்களை பாடுவோம்.
ஓம்
ganesha3ந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றனே.
ன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
ன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
-  திருமந்திரம் (திருமூலர்)
ஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.
- திருமுருகாற்றுப்படை வெண்பா (நக்கீரர்)
ண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
- தேவாரம் (சம்பந்தர்)
shiva_paarvathiன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.
- தேவாரம் (அப்பர்)
ம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
- திருவாசகம் (மாணிக்கவாசகர்)
றிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்.
- அற்புதத் திருவந்தாதி (காரைக்காலம்மையார்)
ற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
- பெரிய புராணம் (சேக்கிழார்)
trideviபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
னம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.
- அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர்)
ருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகமுண்ட ஒண்சுடரே.
vishnu-lakshmi2ண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந்துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடிநின்று ஆடிப்
பரந்து திரிகின்றனவே.
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகு
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
- திவ்யப் பிரபந்தம் இயற்பா (பூதத்தாழ்வார்)
ங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
- திருப்பாவை (ஆண்டாள்)
சான்றுகள்:

Thursday, April 21, 2011

ஈழ மக்களின் அழிவு. அல் ஜஜீரா வீடியோஇவ்வளவு அழிவுக்கும் காரணம் யார்? கருணாநிதி குடும்பமா? திமுகவா? காங்கிரஸா? சோனியாவா?

Wednesday, April 20, 2011

சையத் அலி ஷா ஜிலானியோடு பேசும் காஷ்மீரி இந்து

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=lGxT646o4CA#at=34

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதியிடம் செல்போன் பறிமுதல்

கோவை மத்திய சிறையில் குண்டு வெடிப்பு கைதியிடம் செல்போன் பறிமுதல்
நள்ளிரவில் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த போது சிக்கினார்


கோவை, ஏப்.19-

கோவை மத்திய சிறையில் நள்ளிரவில் செல்போனில் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த குண்டு வெடிப்பு கைதி சிக்கினார். அவரிடம் இருந்து செல்போன் ஒன்றை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவை மத்திய சிறையில் 2,200 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளும் மற்றும் பிற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளும் விசாரணை கைதிகளும் அடங்குவார்கள்.

செல்போன் பறிமுதல்

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள 11-ம் பிளாக்கில் ஒரு கைதி அடிக்கடி செல்போனில் பேசுவதாக சிறைக்காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சிறைக்காவலர்கள் நள்ளிரவு நேரங்களில் அந்த கைதி அடைக்கப்பட்டு உள்ள அறையை கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 111/2 மணிக்கு அந்த கைதி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அதையடுத்து சிறைக்காவலர் பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சிறை சூப்பிரண்டு முருகேசன் உத்தரவின் பேரில் உதவி சப்-ஜெயிலர் விஸ்வநாதன் தலைமையில் சிறைக்காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த கைதியை சோதனை செய்தனர்.

பாஷா தம்பி

அதற்குள்தான் செல்போனில் பேசிய விபரம் சிறைக்காவலர்களுக்கு தெரிந்து விட்டது என்பதை அறிந்து கொண்ட அந்த கைதி செல்போனில் இருந்த சிம்கார்டை கழற்றி கடித்து வீசி விட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்ட போது அவரது பெயர் நவாப்கான் (40) என்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருப்பவர் என்றும் தெரியவந்தது.

மேலும் அவர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவை சிறையில் உள்ள தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் தம்பி என்றும் விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணை

அவர் பயன்படுத்திய செல்போன் நம்பர் என்ன? அவர் யாருடன் தொடர்பு கொண்டு பேசினார்? என்ற விபரங்களை அறிய சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகூர் தர்கா மாதிரியான ஒரு பாகிஸ்தான் தர்காவில் குண்டு வைத்து 45 பேர் பலி

நாகூர் தர்கா மாதிரியான ஒரு பாகிஸ்தான் தர்காவில் குண்டு வைத்து 45 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 45 பேர் பலி


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேரா காசிகான் பகுதியில் உள்ள சூபி வழிபாட்டு தலத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் உடல் சிதறி பலியாயினர். 100 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இஸ்லாமிய மதப்போதகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள்

இஸ்லாமிய மதப்போதகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 07:36.40 மு.ப GMT ]
இஸ்லாமிய மதப்போதகராக மாறிய முன்னாள் பெர்லின் ராப் இசைக்கலைஞர் டெசோ டோக் வீட்டில் பொலிசார் திடீர் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்களை கைப்பற்றினர்.
35 வயது டெசோ டோக்கின் உண்மையான பெயர் மமோடு. இஸ்லாமிய வட்டாரத்தில் அவரது பெயர் அப்துல் மலிக் என பரவலாக அறியப்படுகிறது. 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அவரது வீட்டில் 16 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இசைக்கலைஞர் டெசோ யூடூப்பில் பதிவு செய்த வீடியோவிலும் பகுதி அளவில் தானாக இயங்கக்கூடிய க்ளாக் பிஸ்டலில் அவர் குண்டுகள் நிரப்புவது போன்ற காட்சி உள்ளது. அவர் வைத்திருந்த நவீனத் துப்பாக்கிக்கு உரிய லைசென்ஸ் இல்லை.

முன்னாள் ராப் கலைஞர் மீதான ஆயுதக் குற்றச்சாட்டை பெர்லின் மாநில விசாரணை செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஸ்டெல்ட்னர் உறுதிப்படுத்தினார். மமோடு பெயரில் இருந்த போது அவர் போதை மருந்துக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார்.

இஸ்லாமியராக மதம் மாறிய அப்துல் மலிக் என்ற பெயர் பெற்றுள்ள ராப் இசைக் கலைஞர் வெளிப்படையாக வன்முறை ஜிகாத் முறையை பாராட்டி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்

பர்தா அணியாத முஸ்லிம் பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 08:58.23 மு.ப GMT ]
பிரிட்டனில் பர்தா அணியாத முஸ்லிம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு இனம் தெரியாத முஸ்லிம் தீவிரவாதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும்போக்கு கொள்கையுடைய இந்த முஸ்லிம்கள் கிழக்கு லண்டனில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத ஒரு பெண் மருந்தாளர் தான் பர்தா அணியுமாறு அச்சுறுத்தப்பட்டதாக முறையிட்டுள்ளார். தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று ஒருவர் தன்னை எச்சரித்ததாகவும் அவர் முறையிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அச்சுறுத்தியமை நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்படவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி பேர்மிங்ஹம் தொகுதியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித் மஹ்மூத் கருத்து வெளியிடுகையில்,"இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதைக் கண்டித்துள்ளார். அதோடு இவர்கள் மற்றவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் பர்தா அணிய வேண்டியது உங்கள் கடமை என்பதை சகோதர உணர்வோடு யாரும் யாருக்கும் ஞாபகமூட்டலாம். ஆனால் அதற்காக உங்களைக் கொல்லுவோம் என்று அச்சுறுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று பிரிட்டனில் உள்ள பிரபல முஸ்லிம் மதகுரு ஒருவரும் தெரிவித்துள்ளார்.

"அம்பாறையில் மதமாற்றங்களைத் தடுக்க இந்துமத அமைப்புகள் முன்வரவேண்டும்'

"அம்பாறையில் மதமாற்றங்களைத் தடுக்க இந்துமத அமைப்புகள் முன்வரவேண்டும்' Wednesday, 20 April 2011 16:31 Hits: 25

அன்னமலை நிருபர் : அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மதமாற்றங்களைத் தடுப்பதற்கு இப்பகுதியிலுள்ள இந்து சமய அமைப்புகளும் சமயப் பற்றுள்ளவர்களும் முன்வரவேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் வி.கைலாசபிள்ளை தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச இந்துமா மன்றத்திற்கான புதிய கட்டிடத்திறப்பு விழா அண்மையில் மன்றத்தின் தலைவர் வி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.45 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினை பிரதம அதிதியாக கலந்துகொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கைலாசபிள்ளை திறந்து வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்; எமது இந்து மக்களின் வறுமையை காரணம் காட்டி பலர் அவர்களுக்கு சலுகைகளை வழங்கி மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.உலகில் காணப்படும் மதங்களில் இந்து மதத்திற்கென தனியிடம் உண்டு.இம் மதத்தில் பொதிந்துள்ள கருத்துகளை சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் தெளிவூட்டுவதற்கு இந்து அமைப்புகள் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும்.

அந்த வகையில் ஆலையடி வேம்பு பிரதேச இந்து மாமன்றம் இங்குள்ள மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன.இந்த இந்து மாமன்றத்தின் செயலாளராக இருக்கின்ற சரவணபவனின் செயற்பாடுகள் மூலம் இப்பிரதேசத்தில் இந்து மதமும் சமூகப் பணியும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள்,மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள்,சீருடைத் துணிகள் வழங்கல்,சமய விழாக்கள் என்பவற்றை இம் மன்றம் முன்னின்று செயற்படுத்தியது. இந்து சமயத்தை விழிப்படையச் செய்வதற்கும் மதமாற்றத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் இவ்வாறான அமைப்புகள் செயற்படும் விதம் பாராட்டத்தக்கதாகும்.இங்கு திறக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தை இந்துக்கள் அனைவரும் சமய விழாக்களுக்கு பயன்படுத்தி நன்மைபெறவேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன்,இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஞானமயானந்தாஜீ,மன்றச்செயலாளர் வே.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இக்கட்டிடத்திற்கான கணிசமான நிதியுதவியினை அகில இலங்கை இந்து மா மன்றமும் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, April 15, 2011

ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா நாளை

ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் கட்டிடத் திறப்பு விழா நாளை Friday, 08 April 2011 09:19 Hits: 18
திருக்கோவில் நிருபர் : ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு இந்து மாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அதிதிகளாக நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சுவாமி சர்வ ரூபானந்தாஜீ,மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஞானமயானந்தாஜீ மகராஜ், அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர்,வி.கயிலாசபிள்ளை,இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

விசேட அதிதிகளாக அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்விழாவில் சான்றோர் கௌரவிப்பு வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல்,இந்து அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

Monday, April 11, 2011

தோல்வியடைந்த லவ் ஜிஹாத்- மதமாற்றத்தை உதறிய இந்து பெண்

பெண்களே இந்த பெண்ணிடமிருந்து கற்றுகொள்ளுங்கள்.
ஏமாற்றுதலுக்கு பலியாகாதீர்கள்.

Duped into conversion, woman gets divorce
HT Correspondent, Hindustan Times
New Delhi, April 11, 2011 Email to Author

First Published: 00:33 IST(11/4/2011)
Last Updated: 00:36 IST(11/4/2011)Share more...0 Comments Email print


The Delhi High Court has granted divorce to a Hindu girl under the Special Marriage Act, finding truth in her statement that she was fraudulently made to sign papers by a Muslim youth which later turned out to be registration of marriage and conversion certificate into Islam. The girl and the youth were friends. She had taken his help to get membership of a library in Jama Masjid for which he persuaded her to convert to Islam. It was under this pretext that he made her sign and execute certain documents.

"This court does not find any illegality or perversity in the reasoning given by the learned trial court in accepting the case of the respondent (woman) that she had never adopted Islam religion and there was no proper solemnisation of marriage between the parties," Justice Kailash Gambhir said while upholding a trial court's decree of divorce.

Dismissing a petition filed by a man for setting aside the trial court's order, the court rejected his argument that the woman - being an educated person - knew about all the documents she had signed and the registration of marriage was done with her consent in November 2005.

The man later claimed that by virtue of the registration of marriage and conversion certificate, she became his wife.

When the woman discovered the fraudulent act in May 2007, she had approached the trial court for dissolution of the marriage under the Special Marriage Act and the court, in November 2008, had granted divorce to her.

Friday, April 08, 2011

உங்கள் குடுமபமா.. கலைஞர் குடும்பமா? சிந்தியுங்கள் தாமரைக்கு வாக்களியுங்கள்

உங்கள் குடுமபமா.. கலைஞர் குடும்பமா? சிந்தியுங்கள் தாமரைக்கு வாக்களியுங்கள்!

திரையிடுவதை எதிர்த்து வழக்கு; பொன்னர்-சங்கர் படத்துக்கு தடை இல்லை; ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

ஆட்சி மாறும். பொன்னர் சங்கர் வரலாற்றை கேவலப்படுத்தும் இந்த படம் தடை செய்யப்படும்
பாஜக போராடும்.


திரையிடுவதை எதிர்த்து வழக்கு; பொன்னர்-சங்கர் படத்துக்கு தடை இல்லை; ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி


Chennai வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 08, 2:24 PM IST மதிப்பீடு இல்லை இமெயில் பிரதி திரைப்படம் சென்னை, ஏப். 8-


முதல்-அமைச்சர் கருணாநிதி கதை- வனத்தில் உருவான பொன்னர் சங்கர் படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் உலகநாதன் வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறியிருந்ததாவது:-

பொன்னர் -சங்கரை கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தினர் குல தெய்வமாக வழிபடுகின்றனர். 22 சமூகத்தினர் வழிபாடு செய்கின்றனர். ஆனால் இந்த படத்தில் பொன்னர்-சங்கர் வரலாற்றின் மூலக்கதை மாற்றப்பட்டு உள்ளது.

படத்தில் டூயட் பாடல்களும் இடம் பெற்று உள்ளன. இந்த படம் வெளி வந்தால் எதிர்கால சந்ததியினரிடம் பொன்னர்- சங்கர் வரலாற்றின் உண்மை தன்மை மாறிவிடும் தவறான எண்ணங்களும் ஏற்பட்டு விடும்.

எனவே படத்துக்கு தணிக்கை குழுவினர் அனுமதி அளிக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட வேண்டும். படத்தை வெளியிடுவதையும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

நீதிபதி ஜோதிமணி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அவர் கதையில் மாறுபாடு இருந்தால் சிவில் வழக்காகத்தான் அதை பதிவு செய்ய வேண்டும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Thursday, April 07, 2011

சைவவித்தகர் பட்ட கற்கை நெறிக்கு இந்து மாமன்றம் விண்ணப்பம் கோரல்

சைவவித்தகர் பட்ட கற்கை நெறிக்கு இந்து மாமன்றம் விண்ணப்பம் கோரல் Wednesday, 06 April 2011 13:45 Hits: 41

அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ்ப்பாணம் இந்து மாமன்றப் பிராந்திய நிலையத்தில் சைவவித்தகர் பட்டத்திற்கான நெறியை ஆரம்பிக்கவுள்ளது.
சைவசமயப் பிரசாரகர்களையும் தொண்டர்களையும் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கில் இவ்விசேட பயிற்சி கற்கைநெறி முழுநேரமாக இடம்பெறவுள்ளது. ஒரு வருட காலத்தைக் கொண்ட இப்பயிற்சி நெறியைத் தொடரும் மாணவர்களுக்கு தங்குமிட வசதி, உணவுடன் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் ஊக்குவிப்பு நன்கொடையும் வழங்கப்படும். சமயநெறியூடாக சமூகசேவை மற்றும் ஆளுமை பற்றிய பயிற்சியும் வழங்கப்படும்.

அறிவும் அனுபவமும் ஆற்றலுமிக்க பல்துறைசார் அறிஞர்களால் பயிற்சி வழங்கப்படும். அத்துடன், இவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவும் கணினிப் பயிற்சியும் கூட வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் விசேட பரீட்சை நடைபெற்று இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியைப் பெற்றவர்கள் அரச, சமய நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிபரத்துடன் அண்மையில் பெற்ற இரு நற்சான்றிதழ்களையும் தேசிய அடையாள அட்டையின் பிரதியையும் இணைத்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும். 20 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரிகள் நேர்முகப்பரீட்சை/ எழுத்துப் பரீட்சை மூலம் நாடளாவிய ரீதியில் சகல மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். விண்ணப்பங்களை பொதுச் செயலாளர், அகில இலங்கை இந்து மாமன்றம் 91/5 சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை, கொழும்பு02 என்ற விலாசத்திற்கு அனுப்ப வேண்டும். யாழ்ப்பாணத்தில் இல.211/17, கோயில் வீதி, நல்லூரில் இருக்கும் யாழ்.பிராந்திய அலுவலகத்திலும் மன்னார் மாவட்ட ஆலய ஒன்றியத்தின் அலுவலகத்திலும் வவுனியாவில் ஸ்ரீசிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அலுவலகத்திலும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்திலும் இவ்விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம்.

நேபாளில் இந்து கோயில் வளாகத்தில் கிறிஸ்துவ கல்லறை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உண்ணாவிரதம்

வாடிகனில் இந்துக்களுக்கு ஒரு முருகன் கோவில் அமைத்துகொடுங்கள்
பிறகு பார்க்கலாம்.


நேபாளில் இந்து கோயில் வளாகத்தில் கல்லறை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

..
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2011,02:57 IST
கருத்தை பதிவு செய்ய

காத்மாண்டு: நேபாள் நாட்டில் இந்து ‌கோயில் வளாகத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு இடம் ஒதுக்க கோரி அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதி ஒத்தி வைத்தது. நேபாள் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் எனும் இந்து கோயில் சேல்ஷி்மான்டக் வனப்பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தங்களுக்கு கல்லறைக்கு இடம் கோரி பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.இதற்கு கோயில் அறக்கட்டளை மேலான்மை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் கிறிஸ்தவ அமைப்புகம் ‌கோயில் நிர்வாகத்தி‌னை கண்டித்து கடந்த 2 வாரங்களாக கிறிஸ்தவ அமைப்புகள் உண்ணாவிரதம் இருந்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக சுப்ரீ்ம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன. இதனை எதிர்த்து பாரத்ஜாங்கம் என்ற இந்து அமைப்பினர் பதிலுக்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கோயில் வளாகத்தில் கல்லறைக்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது. இரு மனுக்களும் நேற்று நேபாள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன மனு மீதான விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைததார்.