பா.ஜனதா முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி உடல் தகனம்: நரேந்திர மோடி-ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்தினார்கள்
சென்னை, செப். 26-
பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சிறு நீரக கோளாறு காரணமாக சென்னை சூரியா ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1 மாதமாக கோமா நிலை யிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் மரணம் அடைந்தார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தியின் உடல் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் கார்டனில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ் சலி செலுத்துவதற்காக வைக் கப்பட்டது. பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் அஞ்சலி செலுத்தி னார்கள்.
அகில இந்திய பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் இறுதி சடங்கில் கலந்து கொள் வதற்காக நேற்று இரவே சென்னை வந்தார். இன்று காலையில் ஜனா கிருஷ்ண மூர்த்தியின் வீட்டுக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தினார்.
காலை 9 மணியளவில் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் உடல் வேன் மூலம் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அங்கு இறுதி சடங்குகள் நடந்தன. குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மின் மேடையில் தகனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் மறை வுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜியின் சார்பில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத் தினார். பிரணாப் முகர்ஜியின் இரங்கல் கடிதத்தையும் கொடுத்தார்.
மேலும் அஞ்சலி செலுத்திய வர்கள் வருமாறு:-
அகில இந்திய துணை தலைவர் வெங்கையாநாயுடு, தமிழக பா.ஜனதா தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, அனந்தகுமார், திருநாவுக்கரசர், விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் வேதாந்தம், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, குமாரவேலு உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment