Monday, September 17, 2007

மயிலாடுதுறை அருகே விநாயகர் ஊர்வலத்திற்கு தடை

ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள வழியே செல்வதற்கு தமுமுக என்ற இஸ்லாமிய பயங்கரவாத கும்பல் ஆட்சேபித்ததால் போலீஸ் தடை கொடுத்திருக்கிறது.

இனிமேல் இந்து பெரும்பான்மை உள்ள இந்தியாவில் எங்குமே இஸ்லாமிய ஊர்வலங்கள் நடைபெறுவதை தடுக்கக்கோரி இந்து அமைப்புகள் போலீஸில் புகார் செய்யவேண்டும்.

--
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடி தாலுகா கொங்கராயன் மண்டபம், ரவாஞ்சேரி, இலுப்பூர், திருவிளையாட்டம், எடுத்துக்கட்டி சாத்தனுõர், நல்லாடை உள்ளிட்ட ஏழு கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரிஷத் மற்றும் கிராம மக்கள் சார்பில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தரங்கம்பாடி கடலில் கலக்கும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதற்கு அனுமதி கோரி ஒரு மாதத்திற்கு முன் வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு மனு கொடுக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா குழுவினரை ஆர்.டி.ஓ., மற்றும் சீர்காழி டி.எஸ்.பி., அலுவலகங்களுக்கு அழைத்து பேசினர். கொங்கராயன் மண்டபம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குபேர விநாயகர் சிலையை இரண்டு மசூதிகளை கடந்து எடுத்து செல்ல வேண்டும் என்பதால் பிரச்னையின்றி செல்ல வேண்டும் என போலீசார் எழுதி வாங்கினர்.

நேற்று முன்தினம் சங்கரன்பந்தல் கிராம த.மு.மு.க.,வினர் தங்கள் பகுதி வழியாக விநாயர் சிலை வரக்கூடாது என பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்று முன்தினம் இரவு கொங்கராயன் மண்டபத்திற்கு சென்ற போலீசார், விநாயகர் சிலையை எடுத்து செல்லும் பாதையை மாற்றக் கூறினர். இதற்கு கிராம மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நாகை ஆயுதப்படை மற்றும் தஞ்சை கலவர தடுப்பு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இதையடுத்து ஏழு கிராமங்களைச் சேர்ந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்வது நிறுத்தப்பட்டது. இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன், பா.ஜ., மாநில செயலர் ராஜா, மாநில தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோரை அழைத்து சில தினங்களில் திட்டமிட்ட பாதையில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நன்றி தினமலர்

No comments: