கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை: வேதாந்தி மறுப்பு
அயோத்தியா: தமிழக முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசவில்லை என விஸ்வஇந்து பரிஷத் மூத்த தலைவர் ராம்விலாஸ் வேதாந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். வேதாந்தியின் விமர்சனத்தை அடுத்து தமிழகத்தில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் இது குறித்து வேதாந்தி கூறியிருப்பதாவது: கருணாநிதி குறித்து நான் நேரிடையாக எதுவும் பேசவில்லை. ராமர் குறித்து பழித்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மரணத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கீதை உள்பட இந்துமத நூல்கள் கூறுகின்றன என்றுதான் சொன்னேன் ஆனால் பத்திரிகைகள் தவறாக எடுத்து கூட்டி பிரசுரித்து விட்டன. அதே நேரத்தில் ராமர் இல்லை என்றும் ராம பகவான் பற்றி இழித்து பேச யாரையும் அனுமதிக்க முடியாது . மேலும் கருணாநிதி தலையை கொணர்ந்தால் தங்க காசுகள் வழங்கப்படும் என்று நான் சொல்லவே இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment