டைட்டானிக் படம் எடுத்த ஜேம்ஸ் கெமரான் தற்போது ஒரு டாகுமெண்டரி எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
இதில் இயேசு உயிர்த்தெழவில்லை. ஏசுவின் கல்லறையில் அவரது எலும்புகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன் என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறாராம்.
1980இல் இஸ்ரேலிய அகழ்வாராய்வாளர்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட ஒரு குகை கல்லறையை கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் பல பெட்டிகளில் எலும்புகள் இருந்தன (ஓஸ்ஸுவரி)
ஒரு பெட்டியில் இயேசு என்று எழுதியிருக்கிறது. இன்னொரு பெட்டியில் ஜோஸப் என்று எழுதியிருக்கிறது. மற்றொரு பெட்டியில் மேரி, இன்னொரு பெட்டியில் மேரி, இன்னொரு பெட்டியில் யூதாஸ் இயேசுவின் மகன் என்று எழுதியிருக்கிறது.
DNA ஆதாரங்கள் மூலம் இயேசுவுக்கும் ஜோஸப்புக்கும் மேரிக்கும் உள்ள உறவை நிரூபித்திருக்கிறார்கள். மற்றொரு மேரிக்கும் இயேசுவுக்கும் டி.என்.ஏ உறவு ஏதுமில்லை என்பதால், அவர் மேரி மக்தலீனாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களுடன்
அந்த ஆவணப்படத்தை பற்றிய தகவல்களுடன் தற்போது நியூஸ் கான்பரன்ஸ் நடந்துகொண்டிருக்கிறது.