Saturday, September 29, 2007

பாஜக மகளிர் அணி, முதல்வர், ஆற்காடு வீராசாமி மீது போலீசில் புகார்


முதல்வர், ஆற்காடு வீராசாமி மீது போலீசில் பா.ஜ., மகளிர் புகார்


சென்னை: முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., புகார் கொடுத்தது. மேலும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம், நேற்று பா.ஜ., மகளிர் அணித் தலைவி சுஜாதா ராவ், அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:இந்து சமுதாயத்தினர் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கும் ராமருக்கு எதிராக கருத்துக்களை, முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்த பேச்சால் கோடிக்கணக்கான இந்துக்களின் மனம் புண்பட்டுள்ளது. எங்களுடைய மத நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் காயப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் பேசியுள்ளார். கருணாநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அநாகரிகமான செயல்.:பா.ஜ., வக்கீல் அணி பிரிவு தலைவர் கிருஷ்ணமாச்சாரி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி துõண்டுதலின் பெயரில் தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை தி.மு.க., தொண்டர்கள் தாக்கினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் வீச்சில் மகளிர் அணியைச் சேர்ந்த புஷ்கலா, தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சி அலுவலகத்தை தாக்குவது இதுவே முதல்முறை. இது அநாகரிகமான செயல்.அயோத்தியில் உள்ள சாமியார் வேதாந்தி, முதல்வர் கருணாநிதி குறித்து தெரிவித்து கருத்துகளுக்கும், பா.ஜ.,வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்நிலையில், எங்கள் அலுவலகத்தை தாக்க துõண்டுதலாக இருந்த அமைச்சர் வீராசாமி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு கிருஷ்ணமாச்சாரி தெரிவித்துள்ளார்.

No comments: