Saturday, September 29, 2007

சென்னையில் பாஜக, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சென்னையில் பாஜக, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 28, 2007

thatstamil

சென்னை:

தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் அலுலவகங்களை திமுகவினர் தாக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று பாஜக, இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள பாஜக, இந்து முன்னணி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைமை அலுவலகங்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல தமிழகம் முழுவதும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் அலுவலகங்களும் தாக்கப்பட்டன.

இதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே இன்று பாஜக, இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் பாஜக தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும், நூற்றுக்ணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் எம்பி பேசியதாவது, பாரதிய ஜனதா அலுவலகத்தை அமைச்சர் முன்னிலை வகித்து சேதப்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற திமுக அரசு அக்.1ம் தேதி பந்த் நடத்தப்போவதையும் கண்டிக்கிறேன்.

ஒரு கட்சி அலுவலகத்தை, இன்னொரு கட்சியினர் தாக்கியது தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

இல.கணேசன் பேசும்போது, மக்கள் பாஜகவினர் பக்கம் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு, மக்கள் எப்போதும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அக். 1ம் தேதி பந்த் அறிவித்திருப்பது தேவையில்லாத ஒன்றாகும். இந்த பந்த் நீதிமன்ற தடை உத்தரவுக்கு எதிரானதாகும் என்று அவர் கூறினார்.

No comments: