Wednesday, September 19, 2007

ராமர் பாலம் என்பது கற்பனையே -கிறிஸ்துவர் தா.பாண்டியன் பேட்டி

ராமர் பாலம் என்பது கற்பனை என்று கிறிஸ்துவரான தா பாண்டியன் கூறியுள்ளார்.
--
மதுரை: ராமர் பாலம் என்பது கற்பனையே என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகள் ஒரு காப்பியத்தில் வந்த கதாபாத்திரத்தை வைத்து விஞ்ஞான ரீதியில் நிறைவேற்றப்படும் திட்டத்தை செயல்படுத்தாதே என கூறுதல் ஏற்புடையதல்ல. ராமர் பாலம் என்பது கற்பனையே. இயற்கையாக உருவான ஒரு மணல் திட்டுக்கு வைக்கப்பட்ட பெயர் தான் ராமர் பாலம். இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஆதாரமாக கொடுத்த வாக்குமூலத்தை மதவாதிகளின் எதிர்ப்பை காரணம் காட்டி வாபஸ் பெற்றது கண்டிக்கத்தக்கது. இதில் மத்திய அரசின் தெளிவற்ற கொள்கையையே காட்டுகிறது. ராமர் பாலத்தை காப்போம் என்ற பெயரால் தமிழகத்தில் மதக்கலவரத்தை துõண்ட மதவாத சக்திகள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு அடையாளம் தான் பெங்களூருவில் தமிழக முதல்வரின் மகள் வீட்டில் கை வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. மத உணர்வுகளை மதிக்கிறோம் என்ற பெயரில் அரசுகள் உண்மையை மறைக்கக்கூடாது. இப்பிரச்னைகளை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் தமிழகம் முழுவதும் எதிர்ப்பு இயக்கங்களை நடத்துவோம். சேலம் ரயில்வே கோட்டம், சேது சமுத்திர திட்ட பிரச்னை பற்றி விவாதிக்க சென்னையில் செப். 24 ல் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார். தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு, மாநில விவசாயிகள் சங்க செயலாளர் துரைமாணிக்கம், மதுரை மாவட்ட செயலாளர் சேதுராமன் உடனிருந்தனர்.

சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்: திருநெல்வேலியில் இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி எங்களிடம் தெரிவித்துள்ளார். சுடலைமுத்துவின் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் உறுதியளித்துள்ளதாக பேட்டியின் போது தா. பாண்டியன் தெரிவித்தார்.

நன்றி தினமலர்

No comments: