தி.மு.க., ஆட்சியைக் கலைக்க வேண்டும்: ஜெயலலிதா
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதால் தி.மு.க., ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வரின் கடமை. இக்கடமையிலிருந்து அவர் தவறி விட்டார். அமைச்சரும், தி.மு.க.,வின் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இன்று தமிழகத்தில் பா.ஜ., அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம் மீது நடந்த தாக்குதல்களை தி.மு.க., அமைச்சர்களே முன்னின்று நடத்தி உள்ளனர். இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தான் மதுரையில் தினகரன் அலுவலகம் கருணாநிதியின் மகன் அழகிரி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. அது போன்ற மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. இதுபோன்ற வன்முறைகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசைக் கலைக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment