Tuesday, September 25, 2007

உமாபாரதியை கூட்டி ஜெயலலிதாவை கழித்து மீண்டும் மூன்றாம் அணி

காங்கிரஸ்-பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஜெயலலிதா இல்லாத புதிய கூட்டணி

புதுடெல்லி, செப். 25-

அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு மாற்றாக 3-வது அணி உருவாக்கப்பட்டது.

முலாயம் சிங்யாதவின் சமாஜ்வாடி கட்சி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், லோக்தளம், அசாம் கன பரிஷத் உள்பட 8 கட்சிகள் இதில் இடம் பெற்று இருந்தன.

டெல்லி, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் இதன் தலைவர்கள் ஆலோ சனை கூட்டம் நடத்தினார்கள். 3-வது அணிக்கு "ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி'' என பெயர் சூட்டப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது, ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளில் 3-வது அணி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பிறகும் பல்வேறு பிரச்சினைகளில் தலைவர் களிடையே மோதல் ஏற்பட்டது.

சமாஜ்வாடி கட்சி மீது அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா வெளிப் படையாக குற்றம் சாட்டினார். இதே போல் சமாஜ்வாடி கட்சியும் பதிலுக்கு குற்றம் சாட்டியது. இதனால் 3-வது அணியில் பிளவு ஏற்பட்டது.

இதற்கிடையே பார தீய ஜனதாவுக்கும் அ.தி.மு.க. வுக்கும் இடையே கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. சமீபத்தில் பாரதீய ஜனதா மேலிட தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே நெருக்கம் அதிகரித்து வருவதால் 3-வது கூட்டணியிலும் மாற்றம் ஏற்பட்டு புதிய அணி உருவாகிறது.

இந்த புதிய அணி தலைவர் கள் கூட்டம் அரியானா மாநிலம் அம்பாலாவில் நாளை நடக்கிறது. இதில் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி கட்சி), உமாபாரதி (பாரதீய ஜனசக்தி) பாபுலால் மாரண்டி (ஜார்க்கண்ட்), மதன்லால் குரானா (டெல்லி), சவுதாலா (அகில இந்திய லோக்தளம்) ஆகிய 7 முன்னாள் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அசாம் கனபரிஷத் சார்பில் பிருந்தாவன் கோஸ்வாமி, சிரோன்மணி அகாலி தளம் தலைவரும், பஞ்சாய் முதல்- மந்திரியுமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ள வில்லை. அதே சமயம் தேசிய மாநாட்டு கட்சி 3-வது அணியில் இடம் பெற்றுள்ளது.

கூட்டத்தில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும் பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வந்தால் சந்திப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அரியானா காங்கிரஸ் அரசை எதிர்த்து 3-வது அணி சார்பில் பேரணி போராட்டங்கள் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அகல இந்திய லோக்தளம் கட்சி பொது
செயலாளர் அஜய் சவு தாலா தெரிவித்தார்.

-
நன்றி மாலைமலர்

No comments: