Saturday, September 22, 2007

ராமர் விவாதம் நான் தயார்- காங்கிரஸ் தலைவர் பிட்டா அறிவிப்பு


நன்றி தினமலர்

ராமர் குறித்த விவாதத்திற்கு தயார் முதல்வருக்கு பிட்டா அழைப்பு

சென்னை: "முதல்வர் கருணாநிதியுடன் ராமர் குறித்து விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன்' என, பயங்கரவாத ஒழிப்பு இயக்கத் தலைவர் மணிந்தர் சிங் பிட்டா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று பிட்டா கூறியதாவது:தமிழகம் வளர சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது; ராமர் பாலத்தை காக்க, உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். நாடு முழுவதும் உள்ள சங்கராச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களைத் திரட்டி, ராமர் பாலத்தை காக்க போராட முன்வர வேண்டும். உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்கள், ராமர் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர்.


தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் போது, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுகிறார். ராமர் இருக்கிறார் என நான் அவரிடம் நேரடியாக வாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அந்த வாதத்தில் நான் தோற்று விட்டால், உயிரையும் விடத் தயார். பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை கருணாநிதி புண்படுத்திய நிலையில், தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும். மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதை குற்றமாகக் கருதி தண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.வருமானம் கிடைக்கிறது என்பதற்காக புராதனச் சின்னங்களை இடிக்கலாம் என்று அரசு நினைப்பது தவறானது. பா.ஜ., ஆட்சிக் காலத்தில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. தனுஷ்கோடி அருகே கடலை ஆழப்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தனர். ராமர் பாலத்தை அவர்கள் சேதப்படுத்த நினைக்கவில்லை. ஆனால் தற்போதைய திட்டம், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இரு அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு பிட்டா தெரிவித்தார்.

No comments: