Monday, September 24, 2007

பாகிஸ்தான் தையல்காரர்களுக்கு தாலிபான் எச்சரிக்கை நோட்டீஸ்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடை தைக்கும்போது, கடுமையான இஸ்லாமிய முறைப்படி மட்டுமே உடை தைக்கவேண்டும் என்று கூறியுள்ளது. டராவீ என்னும் நேரத்தில் கடை மூடப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பின் மூலம் அனுப்பப்பட்ட இந்த கட்டளைகளோடு, ரம்ஜான் சமயத்தில் இசை கேட்கும் க்டைகளும் தையல்கடைகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இஸ்லாமிய முறைப்படி தைக்க வேண்டும் என்றால் எப்படி தைக்கவேண்டும் என்று தெரியவில்லை. நவீன தையல் மெஷின் உபயோகப்படுத்தாமல், அந்த காலத்தில் ஊசி கொண்டு தைத்தது போல ஊசியாலேயே எல்லா உடையையையும் தைக்க வேண்டும் என்று கூறுகிறார்களா தெரியவில்லை.

எப்படியாயினும், தையல்காரர்களுக்கு என் தார்மீக ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

Taliban threaten tailors
By Our Correspondent


KOHAT, Sept 23: Local Taliban have warned tailors to strictly observe religious code while sewing clothes for men and women and keep their shops shut during taraveeh time.

In a letter sent to tailors, the Taliban claiming to be from the Jamaat-i-Islami asked them not to play music during night and threatened to blow up the shops of those not following the orders.

Police officials termed it a ploy to spread fear. They said police had made arrangements to foil the designs of the miscreants during Ramazan and Eid.

No comments: