Thursday, September 27, 2007

அகஸ்தியர் முதலியாரா?- அரிய செப்பு தகடு கண்டெடுப்பு!

அகஸ்தியர் முதலியாரா?- அரிய செப்பு தகடு கண்டெடுப்பு!
புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007



அம்பாசமுத்திரம்:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் கோவிலில் அரிய செப்பு தகடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி பொதிகை மலைப் பகுதியில் தமிழ் தந்த அகஸ்திய மாமுனிவர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இம்மாவட்டத்தில் அகஸ்தியருக்கு கல்லிடைகுறிச்சியில் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இப்புணரமைப்பு பணியின் போது ஒரு செப்பு தகடு கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து அகழ்வாராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் ஒரு குழு அங்கு ஆய்வு பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட செப்பு தகடு 16ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் அதில் சிவலிங்கமும், தேவியரின் படமும் வரையப்பட்டுள்ளது.

அதே தகட்டில் தமிழில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அகஸ்தியர் "கைக் கோல முதலியார்" பிரிவைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பு உள்ளது.

தொடர்ந்து அங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Thatstamil.com

No comments: