Showing posts with label மேரிலாந்து. Show all posts
Showing posts with label மேரிலாந்து. Show all posts

Friday, July 27, 2007

மேரிலாந்தில் தமிழ் விழா

மேரிலாந்து (அமெரிக்கா): அமெரிக்கா மேரிலாந்து மாகாணம் லான்ஹாம் நகரில் தமிழ் விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் லான்ஹாம் முருகன் கோயில், வடஅமெரிக்கா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் ஆரத் ஜென் வரவேற்றார். சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் 7 ஆண்டு கால சேவைகளை ஆமி ஜென் விளக்கினார். அடுத்து பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை ஜானகி ரங்கராஜனின் பரத நாட்டியம் நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் இரா.மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் கண்ணதாசனின் கவிதைகள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.மோகனை, சர்வதேச பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை இயக்குநர் சாந்தி ஓமகாந்தம் அறிமுகப்படுத்தினார். இரா.மோகனுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் தலைவருமான செல்வின் குமார் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். நிறைவாக கண்ணதாசனின் பாடல்களை நிர்மலா மோகன் பாட, செல்வின் குமார் நன்றி கூறினார்.


நன்றி தினமலர்