பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிலிருந்து எடுத்து முஸ்லீம்களுக்கும் கிறிஸ்த்துவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேல்ஜாதியினர் இஸ்லாமுக்க்கும் கிறிஸ்துவத்துக்கும் சென்று அங்கு உள்ள இட ஒதுக்கீட்டை பெற்று பலன் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்
---
நன்றி மாலைமலர்
முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீட்டுக்கு அவசர சட்டம்- கருணாநிதி அறிவிப்பு
சென்னை, செப். 13-
தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப்பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என் பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்த தாகும்.
2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வர்களுக்கு தனி இட ஒதுக் கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவு டனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்து வதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்.
2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நட வடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக-நீதியரசர் ஜனார்த் தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம்-இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அம்பாசங்கரை தலைவ ராகக் கொண்டு அமைக்கப் பட்ட தமிழ்நாடு 2-வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப் படையாகக் கொண்டு முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க லாம் என்று தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப்பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா வின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
7 comments:
ஹைய்யா.. இனிமே பிள்ளைமாருங்க, பார்ப்பானுங்க, செட்டியாருங்க முதலியாருங்கலெல்லாம் பின்னவீனத்துவம் பீசறதை வுட்டுட்டு முஸ்லீமா ஆகி, கிறிஸ்துவனா ஆகி இட ஒதுக்கீடு பெற்று வளமுடன் வாழலாம்...
ஹைய்யா... ஹைய்யா..
அதுதான் பின்நவீனத்துவ பிள்ளைமாருங்க இப்படி இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கேக்கிறாங்களா?
பின்னவீனத்துவ அய்யங்காருகளும் இஸ்லாமியருக்கு கிறிஸ்துவருக்கு இட ஒதுக்கீடு கேட்கும் மர்மமும் இதுதான்.
பிள்ளையாரின் மூக்கைக் கொய்து பிள்ளையாருக்கே நைவேத்தியம் செய்வது இதுதானா?
அது யாருங்க பின்னவீனத்துவ அய்யாங்காரு?
சரியாக பாயிண்டை பிடித்துவிட்டீர்கள்.
இந்த இட ஒதுக்கீடு உண்மையிலேயே மேல்ஜாதிக்காரர்கள் இட ஒதுக்கீடு பெறும் வழி.
தற்காலிகமாக இஸ்லாமியன், கிறிஸ்த்துவன் என்று கெசட்டில் பதிந்துகொண்டு இட ஒதுக்கீடு பெற்று படித்து முடித்து வேலை வாங்கியதும் மீண்டும் இந்து என்று கெசட்டில் மாற்றிக்கொள்ளலாம்.
மேல்ஜாதிக்காரர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டால் கிடைககாது என்பதால் இந்த குறுக்கு வழி.
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தை 23 சதவீதமாக குறைத்து மேல்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளித்த கலைஞர் மு கருணாநிதிக்கு பாராட்டுக்கள்..
Post a Comment