நன்றி தட்ஸ்டமில்
தென்காசி படுகொலை - குற்றவாளி வீட்டில் போலீஸ் சோதனை
வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007
தென்காசி
தென்காசியில் 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனீபா என்பவரின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
தென்காசியில் கடந்த ஆண்டு இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனீபா உள்ளிட்ட 2 பேர் மற்றும் பாதுகாப்புக்காக வந்த சிலர் தென்காசி காவல்நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட்டு விட்டு திரும்பி வரும் வழியில், அவர்களுக்கும், குமார் பாண்டியன் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அனீபா உள்ளிட்டோர் சேலம் சிறையிலும், குமார் பாண்டியன் தரப்பைச் சேர்ந்தவர்கள் கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அனீபாவின் வீட்டில் தனிப்படை டி.எஸ்.பி ராஜகோபால் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனை விபரம், விசாரணை போன்றவைகளை வெளியே கூற காவல்துறை மறுத்து விட்டது.
அனீபா வீட்டில் நடந்த இந்த அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment