Saturday, September 08, 2007

ஒஸாமா பின் லாடர் அமெக்கர்களள இஸ்லாத்துக்கு அழைப்பு

ஓசாமா பின்லாடன் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

கைரோ: முன்று ஆண்டுகளாக மவுனம் காத்து வந்த பின்லாடன் தற்போது அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் வீடியோ செய்தி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பின்லாடன் வழக்கத்துக்கு மாறாக கேசத்திற்கு டை அடித்து காணப்பட்டார். வெள்ளை டர்பன் மற்றும் வெள்ளை உடையணிந்து காட்சியளித்தார்.30 நிமிடம் ஓடிய அந்த வீடியோவில் அமெரிக்கர்கள் தங்களுக்கே உரிய அதிகாரப்போக்கினை நிறுத்தாத காரணத்தால் ஈராக் போர் முடிவடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் விதமாக மீண்டும் ஓர் பெரிய அளவு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கைவிடுத்ததுடன், அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதன் மூலம் போர் நிறுத்தம் நிகழலாம் எனவும் மதமாற்றத்திற்கு அழைப்பு விடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி தினமலர்
Date : 8/9/2007

2 comments:

கால்கரி சிவா said...

லாடர் என்றால் என்ன? அந்த ஆளின் பெயர் லாடன் தானே?

எழில் said...

எல்லாம் ஒரு மருவாதிதான்
:-))
பின்லாடரை அவன் இவன் என்று குறிப்பிட்டுவிட்டதாக பல இஸ்லாமிய பெருந்தகைகள் வருந்துவதால்தான்..