Friday, September 14, 2007

சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் சாயிபாபா ஆஸ்ரமத்தை தகர்க்க முஸ்லீம் பயங்கரவாதிகள் சதி

நன்றி மாலைமலர்

வேலூர் மாணவி சி.டி.யில் பரபரப்பு தகவல்: சாய்பாபா ஆசிரமத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி

நகரி, செப்.12-


ஐதராபாத்தில் கடந்த 25-ந்தேதி தீவிர வாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 43 பேர் பலியானார்கள். இவ் வழக்கில் வேலூர் மாணவி ரப்சஞ்சானியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சி.டி. யில் இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அதில் தீவிரவாதிகள் ஐத ராபாத்தை தகர்க்க திட்டமிட்டிருந்ததும், எந்தெந்த இடங்களை அவர்கள் குறி வைத்திருக்கிறார்கள்போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் புட்டபர்த்தி சாய் பாபா ஆசிரமத்தை தகர்ப்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருந்தன.

சாய்பாபா ஆசிரமத்திற்குள் எந்தெந்த பகுதியில் மக்கள் அதிகமாகக் அமர்ந் திருப்பார்கள், எந்தெந்த நாட் களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது போன்ற தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

அந்த சி.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ள திட்டத்தை பார்க்கும்போது தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தை நன்கு நோட்டமிட்டு நாசவேலைக்கு விïகம் வகுத்து இருப்பது தெரிய வந்தது.

இதை பார்த்ததும் ஆந்திரா தனிப்படை போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் புட்டபர்த்தி விரைந்து சென் றனர். அங்குள்ள சாய்பாபா ஆசிரமத்தை சுற்றிபார்த்தனர். பிறகு புட்டபர்த்தியில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக ஆசிர மத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆசிரமத்திற்கு வரும் அத் தனை பக்தர்களையும் தீவிரசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கும்படி உத் தரவிட்டனர்.

இதை தொடர்ந்து ஆசிரமத்திற்கு வரும் பக்தர் களிடம் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆசிரமத்திற்குள் வெடி குண்டு ஏதேனும் வைக்கப் பட்டுள்ளதா என்பது பற்றியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புட்டபர்த்தியில் தற்போது காஷ்மீரை சேர்ந்த 186 வியாபாரிகள் உள்ளனர். அவர்களிடம் முழுஅளவில் விசாரணை நடத்த தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் காஷ்மீர் வியாபாரிகளிடம் இதற்கு முன்பு அவர்கள் எங்கு இருந்தார்கள், அவர்களது உறவினர்கள் தற்போது எங்கு வசிக்கிறார்கள் போன்ற விவ ரங்களை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்களில் யார் யார் சமீபத்தில் புட்டபர்த்திக்கு வந்தார்கள் என்பது பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவை தரிசிக்க தினந்தோறும் ஏரா ளமான வெளிநாட்டினர் வருகிறார்கள். அவர்களிடமும் இனி தீவிர சோதனை நடத்தும்படி போலீசுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சாய்பாபா ஆசிரமத்தில் நிரந்தரமாக ஒரு போலீஸ் படையை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: