Friday, September 07, 2007

சுதாகரன் ஏன் குருவாயூர் கண்ணனை கும்பிடவில்லை- ஜோஸப் கேள்வி

குருவாயூர் கோவிலுக்கு சென்ற இன்னொரு மந்திரியால் சர்ச்சை

திருவனந்தபுரம் : குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற கேரள அமைச்சர், அங்கு சுவாமி கும்பிடாதது குறித்து காங்., தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் தேவஸ்வத்தில் அரசு உறுப்பினராக, கேரள அறநிலையத் துறை அமைச்சர் சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுதாகரன், சமீபத்தில் குருவாயூர் கோவிலில், நீர் சுத்திகரிப்பு முறை துவக்க விழாவுக்காக சென்றிருந்தார். அப்போது, கோவில் சம்பிரதாயப்படி, அவர் மேல் சட்டை அணியவில்லை. ஆனால், விழாவுக்கு முன் எல்லாரும் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது கைகூப்பி கடவுளை தொழுதனர். ஆனால், அமைச்சர் சுதாகரன் அவ்வாறு செய்ய வில்லை. இது தொடர்பாக கேரள சட்டசபையில் காங்., துணைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் காங்., எம்.எல்.ஏ., ஜோசப் ஆகியோர் பிரச்னை எழுப்பினர். அமைச்சர் சுதாகரன் சுவாமி கும்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அப்போது சுதாகரன் சபையில் இல்லை. காங்., எம்.எல்.ஏ.,க்களின் விமர்சனம் குறித்து, நிருபர்கள் கூட்டத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்தார் அமைச்சர் சுதாகரன். "மதசார்பின்மையை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் காங்., தரப்பில், இது போன்ற கேள்விகளும் விமர்சனங்களும் எதிர்பாராதவை. என்னை விமர்சித்ததற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறினார் அமைச்சர் சுதாகரன். "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?' என்று கேட்ட போது, "எனக்கு மார்க்சிசம்,லெனினிசம் மற்றும் எனது கட்சியின் கொள்கைள் மீது நம்பிக்கை உண்டு' என்று பதில் அளித்தார்.

நன்றி தினமலர்

No comments: