கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்
ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் 40 அடி உயர வழுக்குமரத்தில் ஏறினர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த ஆக. 31ல் துவங்கியது. முன்னதாக இக்கோயிலின் உபகோயிலான கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில் முன் உறி ரம் நடுதல் நடந்தது. விழாவை முன்னிட்டு செப். 4ல் விசேஷ அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு, மலைக்கோயிலில் இருந்து கோபிநாதசுவாமி புறப்பாடு நடந்தது. பின்னர் கிராமங்களில் திருக்கண் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வழுக்குமரம் ஏறுதல், உறியடி காணுதல் ஆகியவை நேற்று கொத்தபுள்ளி கதிர் நரசிங்கப் பெருமாள் கோயில் முன்பு நடந்தது. 40 அடி உயரமுள்ள வழுக்குமரத்தில், வேலம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் ஏறினர். இதில் பழனிச்சாமி(29) பரிசு முடிச்சை அவிழ்த்தார். பின்னர் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அக்ஷயா கல்வி நிறுவனங்கள் தாளாளர் இ.என்.பழனிச்சாமி, பாலவிக்னா மில்ஸ் நிர்வாக இயக்குனர் பிரபு, ரெட்டியார் சத்திரம் ஒன்றிய தலைவர் சின்னத்தாய் குமாரலிங்கம், துணைத்தலைவர் பால கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) பாலதண்டாயுதம் மற்றும் அறங்காவலர் குழுவினர் விழாவில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment