Friday, September 14, 2007

ஐதராபாத்துக்கு மீண்டும் குறி- 5 தீவிரவாதிகள் ஊடுருவல்

ஐதராபாத், செப். 14-

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 44 பேர் பலியானார்கள்.

இந்த நாசவேலையை வங்க தேசத்தில் இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாதி- இஸ் லாமி இயக்கம் நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல் பட்ட 15 பேர் கைதா னார்கள்.

வங்கதேசத்தில் இருந்து வேலூர் வந்து தங்கி படித்த மாணவி சாகி ரப்ஜானி ஐதராபாத் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அடையாளம் காண உதவியாக இருந்து வருகிறார். அவரது தம்பி ரிஸ்வான் ஹாஜிதான் முக் கிய தீவிரவாதி என்று தெரிய வந்தது. மாணவி ரப்ஜானி கொடுத்த தகவலின் பேரில் பெங்களூரில் இம்ரான் என்ப வன் சிக்கினான்.

அவனிடம் பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஐதராபாத்துக்குள் 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை இம்ரான் வெளியிட்டான். நேற்று முன்தினம் இரவு 2-வது தடவையாக மீண்டும் இம்ரானிடம் உண்மை கண்ட றியும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஐத ராபாத் நகரை தகர்க்க 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கும் திடுக்கிடும் தகவலை இம்ரான் வெளியிட்டான். அந்த 5 தீவிரவாதிகளும் ஐதராபாத் பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்க விïகம் வகுத்து இருப்பதாகவும் இம்ரான் கூறினான். இதன் மூலம் ஐதராபாத்தில் 5 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது நேற்று மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இம்ரான் மயக்க நிலையில் இருந்த போது தனிப்படை போலீசார் மேலும் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அதன் மூலம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறிய குண்டு வெடிப்புகளை நடத்தவும், மற்ற இடங்களில் பெரிய குண்டு வெடிப்புகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் சிறு குண்டு வெடிப்பை நடத்தினால் மதக்கலவரத்தை எளிதாக தூண்டி விட்டு விடலாம் என்று தீவிரவாதிகள் விïகம் வகுத்து இருப்பதாக இம்ரான் கூறினான்.

மெக்கா மசூதி, லும்பினி பூங்கா, கோகுல் சாட் ஓட்டல் ஆகிய 3 இடங்களிலும் குண்டு வைத்தது வங்கதேசத்தில் இருந்து வந்து பதுங்கி இருக்கும் 5 தீவிரவாதிகள் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிரகண் காணிப்பு காரணமாக மீண் டும் அவர்கள் உடனடியாக கைவரிசை காட்ட வில்லை.அவர்கள் எந்த நேரத்திலும் நாசவேலை தாக்குதலில் ஈடு படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இது பற்றி உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "வங்காள தேசத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தீவிரவாத கும்பல் ஐதராபாத்திற்குள் ஊடுருவி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வங்காள தேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்து பின்னர் ரெயில் மூலம் விசாகப்பட்டினம் வழியாக ஐதராபாத் வந்துள்ளனர்'' என்றார்.

உளவுத் துறையின் எச்ச ரிக்கையைத் தொடர்ந்து ஐதராபாத்தில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கொல்கத்தா மற்றும் விசா கப்பட்டினத்தில் இருந்து வரும் அனைத்து ரெயில்களிலும் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் ஊடுருவி யுள்ள 5 தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மாறு வேடத்தில் சென்று பொதுமக்கள் அதி கம் கூடும் பகுதிகளில் கண் காணித்து வருகின்றனர்.

இதற்காக வேறு மாநிலங் களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் ஐதராபாத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

வங்காள தேசத்தில் இருந்து கடந்த மாதம் ஐதராபாத்துக்கு ஏராளமான ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் கும்பலாக ஊடுருவி இருப்பதால் மிகப் பெரிய சதி வேலையில் ஈடுபடுவார்களே என்று அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அந்த தீவிர வாத கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: