Saturday, September 15, 2007

முஸ்லீம் பகுதியில் விநாயகர் ஊர்வலம்: பள்ளபட்டியில் பதட்டம்

இந்துக்களின் ஊர்வலம் போவதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பினால் போலீஸார் தடை செய்துவிட்டார்களாம்.

இனிமேல் இஸ்லாமிய கிறிஸ்துவ ஊர்வலங்கள் இந்து பெரும்பான்மை இந்தியாவில் எங்கு நடந்தாலும், இந்துக்கள் இவற்றை எதிர்த்து போலீஸில் புகார் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்துப்பெரும்பான்மை இந்தியாவில் எங்குமே இஸ்லாமிய ஊர்வலங்களோ கிறிஸ்துவ ஊர்வலங்களோ போகக்கூடாது என்ற நிலையை இந்துக்கள் ஏற்படுத்தினாலே இவர்களுக்கு புத்தி வரும்.

--
நன்றி தட்ஸ்டமில்

முஸ்லீம் பகுதியில் விநாயகர் ஊர்வலம்: பள்ளபட்டியில் பதட்டம்
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007


கரூர்:

கரூர் மாவட்டம் பள்ளபட்டி பகுதியில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருப்பதால் அங்கு பெரும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளபட்டி இந்திரா நகர் பகுதியில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு பள்ளபட்டி நகரைச் சுற்றி வர போலீஸ் அனுமதியை இந்து முன்னணி பெற்றிருந்தது. இப் பகுதியில் ஊர்வலமாக செல்லும் விநாயகர் சிலைகளை கடைசியாக நல்காஞ்சி ஆற்றில் கரைக்கவும் தீர்மானித்திருந்தனர்.

இதற்கு முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்து முன்னணிக்கு கொடுத்த அனுமதியை காவல்துறை ரத்து செய்து விட்டது. ஆனால் இதை ஏற்க இந்து முன்னணி மறுத்து விட்டது. தடையை மீறி ஊர்வலத்தை திட்டமிட்டபடி நடத்துவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் இப் பகுதியில் கலவர சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

5 comments:

Anonymous said...

இது போல எதிர்ப்பு காட்டும் பதிவுகள் தேவைதானா?

வாழு வாழவிடு என்று இருப்பதுதானே இந்து குணம்?

Anonymous said...

வினாயகர் ஊர்வலமே, கலவரத்தை உருவாக்க இந்து தீவிரவாத்தின் தந்திர முயற்சி தானே. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தான் அவை வீரியமாக நடத்தப்படுகிறது.
உதயன்.

எழில் said...

வினாயகர் ஊர்வலத்தின் மூலம் எப்படி கலவரம் உருவாகும்? வினாயகர் ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தால் கலவரம் உருவாகும். வினாயகர் ஊர்வலத்தில் செல்பவர்களை தாக்கினால் கலவரம் உருவாகும். எங்கள் ஏரியாவில்தாரை தப்பட்டை அடிக்கக்கூடாது என்று அராஜகம் செய்தால் கலவரம் உருவாகும்.

ஆக என்ன செய்யலாம்? தென்காசி கோவிலுக்கு முன்னால் மசூதி கட்டலாம். அப்போது மசூதிக்கு எதிராக கோவில் இருப்பது கலவரத்தை உருவாக்க இந்து தீவிரவாதத்தின் த்ந்திர முயற்சி என்றும் அனானியாக வந்து எழுதிவிட்டு செல்லலாம்.

இந்துக்கள் அவ்வளவு ஏமாளிகள் அல்ல.

Anonymous said...

ஐயா.. ஒன்றை கவனித்தீர்களா? தமிழத்தில் எத்தனையோ கோவில்களில் உற்சவங்களும், தேரோட்டமும் நடைபெறும் போது எந்த கலவரமும் நடப்பதில்லை. ஆனால் வினாயகர் ஊர்வலம் மட்டும் விதிவிலக்கு. ஏன்? இது கலவரத்தை தோற்றுவிக்கவே வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பக்தியோடு நடைபெறும் சடங்குகளில் எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால் வினாயகர் ஊர்வலங்கள் கலவர நோக்கோடு தான் நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் இம்மாதிரி இருந்ததா என்றால் இல்லை. வினாயகர் மீது வந்த பக்தி சமீபத்திய ஆண்டுகளில் தான். ஊர்வலங்களில் சமூக விரோதிகளை கலக்க விட்டு கலவரம் தூண்டப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. முஸ்லிம் பகுதிகளில் அனுமதிக்கும் போது ஊர்வலக்காரர்கள் அல்லது கலவரக்காரர்கள் ஆபாசமான கூச்சல்களும்,அருவருக்கதக்க செய்கைகளும்( உள்ளாடைகளை காட்டுவது) செய்யும் போதும் அவை பக்தியின் பெயரால் தான் நடத்தப்படுகிறது என்பதை நம்ப சொல்கிறீர்களா? அவ்வூர்வலம் நடந்து முடிந்த மறுதினம் பார்க்கவேண்டுமே பிள்ளையாரை, குப்பையை விட கேவலமாக கிடப்பார் வீதியிலே. ஒருமுறை ஒரு குழந்தையின் கழிப்பிடமாக இருந்தார் வினாயகர்.ஏன் இந்த நிலை? ஆர்ப்பாட்டமாக நடத்துபவர்கள் முறையாக அப்புறப்படுத்தவேண்டாமா? என்னமோ போங்க...

உதயன்

எழில் said...

//தமிழத்தில் எத்தனையோ கோவில்களில் உற்சவங்களும், தேரோட்டமும் நடைபெறும் போது எந்த கலவரமும் நடப்பதில்லை.//

எல்லாம் நடக்கிறது.. உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

அல்லது நீங்கள் அனானியாக வந்து எழுதுவதன் நோக்கம் வேறு..