Sunday, September 16, 2007

ரமதான் மாதத்தில் மெக்காவில் பிச்சை எடுப்பதை தடுக்க சவுதி அரசு முயற்சி

ரமதான் மாதத்தில் மெக்காவில் பிச்சை எடுப்பதை தடுக்க சவுதி அரசு முயற்சி எடுத்துள்ளது.

மெக்காவில் இருக்கும் 2500 மசூதிகளின் முன்னாலும் ஏராளமான பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கிறார்கள். இது ரமதான் மாதத்தில் அதிகரிக்கிறது.

இப்படி பிச்சை எடுப்பதை தவிர்க்கவும், அவர்களை கைது செய்யவும் சவுதி அரசு முயற்சி எடுக்கிறது.

சவுதி அரேபியாவில் இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளிலிருந்து செல்லும் ஊழியர்களுக்கு மாத சம்பளமே 200 டாலர்தான் கொடுக்கிறார்களாம். ஆனால், இப்படி பிச்சை எடுத்தால் தினசரி 100 டாலர் கிடைக்குமாம்.

தொழிலாளர்களின் உழைப்பை கேவலமாக அடிமையிடம் வாங்குவது போல வாங்கிகொண்டு பிச்சை போடுவதை போல சம்பளம் தரும் சவுதி அரேபிய அரசு சம்பள சட்டங்களை மாற்றினாலே இது போன்ற பிச்சை எடுப்பதை நிறுத்திடலாமே. உழைப்புக்கேற்ற ஊதியம் தந்தால், ஏன் மக்கள் பிச்சை எடுக்க செல்வார்கள்?

ஆவண செய்யுமா சவுதி அரசு?

Saudis start campaign to curb beggarsPublished: Saturday, 15 September, 2007, 02:32 AM Doha Time

RIYADH: Saudi Arabia has launched a campaign to combat the lucrative business of begging that tends to flourish during the holy month of Ramadan, the daily Okaz reported yesterday.
The newspaper said the campaign would include targeting beggars who congregated outside mosques, shopping centres and other public places.
Statistics would be compiled on numbers and nationalities of the beggars as well as the tricks they used to generate pity — and avoid the unwanted attentions of the police, Okaz said.
The paper quoted an official in Makkah as saying instructions had been issued to imams to clamp down on begging outside the 2,500 mosques in the Muslim world’s holiest city.
Begging becomes more prevalent during Ramadan and at Eid al-Fitr, the feast that marks the end of fasting during the holy month.
It also flourishes in other Gulf states, and newspapers have printed stories of beggars earning as much as the equivalent of $100 a day, while the monthly wage of a manual labourer from Asia is around $200. - AFP

No comments: