Saturday, September 15, 2007

திருவொற்றியூர் மசூதியில் தொழுகையில் கலந்துகொள்ள பெண்களுக்கு அனுமதி மறுப்பு

திருவொற்றியூர் மசூதியில் தொழுகையில் கலந்துகொள்ள

திருவொற்றியூர், செப்.15: திருவொற்றியூர் மசூதியில் தொழுகையில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், பெண்களுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

திருவொற்றியூர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள மசூதியில், அப்பகுதியைச் சேர்ந்த 650 குடும்பத்தினர் தினமும் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த தொழுகையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பெண்களையும் தொழுகையில் அனுமதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகிகளிடம் பெண்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். தொழுகையில் கலந்துகொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக கூறிய மசூதி நிர்வாகத்தினர்,, சம்பிரதாயத்தை மீறக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில், திருவொற்றியூர் போலீசில் முஸ்லிம் பெண்கள் புகார் கொடுத்தனர். அதில், ‘மசூதியில் தொழுகை நடத்த வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும்Õ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் திருவொற்றியூர் மசூதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ரம்ஜானை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நோன்பு சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையில் கலந்துக்கொள்ள அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் திரண்டு வந்தனர்.

அவர்களை மசூதிக்குள் விடாமல் நிர்வாகிகள் தடுத்தனர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், ‘தொழுகைக்கு வந்த பெண்களை தடுக்காதீர்கள்Õ என்று கேட்டுக்கொண்டனர். இருப்பினும் அவர்களை அனுமதிக்க மசூதி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

இச்சம்பவத்தால் திருவொற்றியூர் மசூதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, தொழுகைக்கு வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

மசூதி நிர்வாகிகள் கூறுகையில், ‘மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தக்கூடாது என்று பெண்களில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால்தான் பெண்களை தொழுகையில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லைÕ என்றனர்.

-
நன்றி தினகரன்.
விட்டுப்போனதை சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி

2 comments:

Anonymous said...

செய்தி தாளில் இருந்து சுட்டிருக்கிறீர்கள். குறைந்த பட்சம் அந்த பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்திருக்கலாம்....

Anonymous said...

இறைவனை தொழக்கூட அனுமதி இல்லாத இந்த பெண்மணிகள் இந்துமதத்தினை தழுவி எல்லோரும் கோவிலுக்கு செல்வது போல சென்று இறையை வழிபடலாம். ஏன் அவர்களே கூட பூசாரிகளாக இருந்து வழிபடலாம்.

இவர்களுக்கு இந்துமதத்துக்கு நல்வரவு