புதிய கட்சி ஜ.மு.மு.க., உதயம்
சென்னை : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்தவர்கள் "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ளனர். கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடசென்னை மாவட்ட செயலர் காஜா மொய்தீன் தலைமையில் ராயபுரத்தில் போட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, "ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் துவக்கியுள்ளனர். இது நேரடி அரசியல் கட்சியாக செயல்படும் எனவும், கறுப்பு, வெள்ளைக் கொடியில் பிறை நட்சத்திரம் பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பொதுச் செயலராக காஜா மொய்தீன், அவைத் தலைவராக பாஷா, பொருளாளராக அப்துல் ரகுமான், துணை பொதுச் செயலராக சதாத் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நன்றி தினமலர்
1 comment:
ஏற்கனவே 3/4 இப்ப அதிலயும் 1/2
-மெளலாசா
Post a Comment