நக்ஸலைட்டுகளாலேயே பிற்போக்கு வாதிகள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும், நக்ஸலைட்டுகளும் கூட்டணி வைத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜனார்தன் ரெட்டிக்கு வைத்த வெடிகுண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது சமீபத்தில் ஆந்திராவில் நடத்திய இரண்டு பயங்க்ரவாத தாக்குதல்களிலும் உபயோகப்படுத்திய வெடிகுண்டு மாதிரியில் உள்ளது தெரியவந்துள்ளது.
பயங்கரவாதங்கள் பயங்கரவாதங்களோடு கை கோர்ப்பதில் ஆச்சரியம் இல்லை.
ஜனார்த்தன் ரெட்டிக்கு குறி வைக்கப்பட்ட விவகாரத்தில்... திடீர் திருப்பம்! அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு
ஐதராபாத்: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜனார்த்தன் ரெட்டியை கொலை செய்யும் நோக்கத்துடன், மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளால் நேற்று முன்தினம் காலை நடத்தப்பட்ட கண்ணி வெடி தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற் பட்டுள்ளது.
ஐதராபாத் லும்பினி பார்க்கில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட அமோனியம் நைட் ரேட் தான், நேற்று முன்தினம் நடந்த கண்ணிவெடி தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தடயவியல் சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆந்திரா முன்னாள் முதல்வரும், லோக்சபா எம்.பி.,யுமான ஜனார்த் தன் ரெட்டி, அவரது மனைவியும், மாநில அமைச்சருமான ராஜலட்சுமி ஆகியோர் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்தில் இருந்து, நேற்று முன்தினம் காலை காரில் திருப்பதிக்கு சென்றனர். ஆதரவாளர்கள் உடன் சென்றதால், 21 கார்கள் பின் தொடர ஊர்வலமாக சென்றனர். அப்போது, சிறிய பாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் இருந்து ஜனார்த்தன் ரெட்டியும், அவரது மனைவியும் உயிர் தப்பி விட்டனர். ஆனால், ஆதரவாளர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த கண்ணி வெடி தாக்குதல் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் மத்திய மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து பல பொருட் களை சேகரித்தனர். 200 மீட்டர் நீளம் கொண்ட எலக்ட்ரிக் ஒயர், வெடிமருந்து குழாய்கள், பிளாஸ் டிக் பக்கெட்கள் ஆகியவை அப்பகுதியில் கிடைத்தன. கிடைத்த பொருட்களை ஆய்வுக் கூடத்துக்கு கொண்டு சென்று ஆய்வு செய்த போது, வெடிகுண்டை வெடிக்க செய்ய அமோனியம் நைட் ரேட்டை நக்சலைட்டுகள் பயன் படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்தது. கடந்த மாதம் 25ம் தேதி ஐதராபாத்தில் உள்ள லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட் உணவகம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்து 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு பகுதிகளில் வெடித்த குண்டுகளிலும் அமோனியம் நைட்ரேட் தான் பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் காரணம். நேற்று முன்தினம் நடந்த கண்ணி வெடி தாக்குதல் நக்சலைட் டுகளின் கைவரிசை. ஆனால், இரண்டு தரப்பினரும் வெடிகுண்டை வெடிக்க செய்ய ஒரே மாதிரி அமோனியம் நைட் ரேட்டை பயன்படுத்தியுள்ளது போலீசாருக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை நடந்த கண்ணி வெடி தாக்குதல் குறித்து கிடைத்த புதிய தகவல்கள் வருமாறு: ஜனார்த்தன் ரெட்டியின் சொந்த ஊர் நெல்லுார் மாவட்டத்தில் உள்ள வாக்காடு கிராமம். இங்கு அவருக்கு சொந்தமான என்.பி.கே.ஆர்., பொறியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியை அவரது மகன் நிர்வகித்து வருகிறார். கண்ணி வெடி தாக்குதல் நடந்த இடம் இந்த கல்லுாரிக்கு அருகில் உள்ளது. அந்த இடத்தில் இருந்து ஒரு ஹெல்மெட், உணவு பாக்கெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, மோட் டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கண்ணி வெடி தாக்குதல் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே நக்சலைட்டுகள் திட்டமிட்டு விட்டனர். எனவே, கல்லுாரிக்கு அருகில் முகாமிட்டு எந்த வித பதட்டமும் இன்றி செயல்பட்டு வந்துள்ளனர். கண்ணி வெடி வெடித்த சிறிய பாலம், தெலுங்கு கங்கை கால்வாய் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இங்கு எலக்ட்ரிக் ஒயரை ஏற்கனவே நக்சலைட்டுகள் இணைத்து வைத்து இருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை தான் பாலத்தின் அருகே மண்பகுதியில் கண்ணி வெடியை மேலாக புதைத்து வைத்திருந்தனர். கண்ணி வெடி தாக்குதல் நடந்த உடன் அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல் லை என தற்போது தெரியவந் துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. கண்ணி வெடி தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய ஜனார்த்தன் ரெட்டியும், அவரது மனைவி ராஜலட்சுமியும், திருப்பதியில் நேற்று தரிசனம் செய்தனர். சித்துர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி.,க்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், முன்னாள் முதல் வர் சந்திரபாபு நாயுடு, துணை சபாநாயகர் குதுகலம்மா, அமைச்சர் செங்காரெட்டி, காங்கிரஸ் கொ றடா கிரண்குமார் ரெட்டி ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment