ஆண்டுக்கு நான்காயிரத்து ரூ.500 கோடி "பந்த்' செய்வதால் இழக்கிறது கேரளா
கண்ணுõர் :கடையடைப்புகள் மூலமாக கேரளாவுக்கு ஆண்டுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக, பந்த் எதிர்ப்பு முன்னணி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதனால், அரசுக்கு மட்டும் 750 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
கேரளாவில் மாநிலம் தழுவிய கடையடைப்பு ஆண்டுக்கு சராசரியாக ஏழு முறை நடத்தப்படுகிறது. "லோக்கல்' பந்த்கள் ஆண்டுக்கு 185 முதல் 200 வரை நடத்தப்படுகின்றன. இவற்றில் சிக்கி மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும், அடிதடியில் காயம் ஏற்பட்டும் பலர் இறந்து போகின்றனர். ஒவ்வொரு கடையடைப்பின் போதும் பலர் வேலையிழக்கின்றனர். பெரிய அளவில் வருமானமும் பாதிக்கிறது.நிலைமை இப்படியே நீடித்தால் முதலீடு செய்யவே முடியாத மாநிலம் என்ற நிலைக்கு கேரள மாநிலம் தள்ளப்பட்டு விடும் என்று இந்த முன்னணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்
நன்றி தினமலர்
No comments:
Post a Comment