Friday, September 14, 2007

ஹைதராபாதில் 300 முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி

ஐதராபாத்தைச் சேர்ந்த 300 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி- உண்மை கண்டறியும் சோதனையில் பிலால் கூட்டாளி தகவல்

பெங்களூர், செப். 13-


ஐதராபாத்தில் நடந்த இட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 43 பேர் பலியா னார்கள். இந்த குண்டு வெடிப்பை வங்கதேசம் மற் றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற `ஹூஜி' என்ற தீவிர வாத இயக்கம் நடத்தியது தெரியவந்தது.

இந்த இயக்கத்தை ஷாகித் பிலால் என்பவன் நடத்தி வந்தான். இவனது கூட்டாளி சையத் இம்ரான்கான் ஐத ராபாத்தில் மே மாதம் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டான்.

இம்ரான்கானிடம் விசா ரணை நடத்திய போது ஐதரா பாத் குண்டு வெடிப் பில் பிலால் தொடர்பு குறித்தும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களையும் தெரிவித்தான். அவனிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூர் கொண்டு செல்லப்பட்ட இம்ரான் கானிடம் 2-வது முறையாக உண்மை கண்டறியும் சோதனை நேற்று நடந்தது.

அப்போது ஷாகித் பிலால் பற்றி மேலும் பல தகவல் வெளியானது. ஐதராபாத்தைச் சேர்ந்த வேலை இல்லாத வறுமையில் தவிக் கும் இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு மூளை சலவை செய்து தீவிரவாத பயிற்சி அளித்தனர். இவ் வாறு 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தனது இயக்கத் தில் சேர்த்து இருக்கிறான்.

இவன் தனது இயக்கத்தை ஆந்திராவில் பதிவு செய்ய முயற்சி செய்த போது அரசு அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதனால் பிலால் ஐதராபாத்தில் ரகசியமாக இயக்கத்தை நடத்தி வந்த தாக இம்ரான்கான் தெரி வித்தான்.

இம்ரான்கானிடம்நடத் திய விசாரணையில் தீவிர வாதிகள் செயல்பாடுகள் பற்றி பயனுள்ள தகவல்கள் கிடைத்துள்ளதாக விசா ரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்ரான்கான் தெரிவித்த தகவல்கள் மூலம் ஐதராபாத் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள் ளனர். அந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

No comments: