Tuesday, September 11, 2007

மலம் தின்னவைத்த திமுக ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு 1000 ரூபாய் அபராதம்

மலம் தின்ன வைத்த கொடுமை மாஜி தலைமை ஆசிரியருக்கு சிறை



திருச்சி : திண்ணியத்தில் மனித மலத்தை தின்ன வைத்த கொடூர வழக்கில் தலைமை ஆசிரியருக்கு கோர்ட் தண்டனை விதித்தது. திருச்சி, லால்குடி, திண்ணியத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. ஆதிதிராவிடர். தொகுப்பு வீடு கோரி ஊராட்சி தலைவியிடம் பணம் கொடுத்து வீடு கிடைக்காமல் ஏமாந்தார். இது பற்றி தண்டாரோப்போட்டு ஊர்முழுக்கத் தெரிவித்தார். ஊராட்சி தலைவி ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியன் மற்றும் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தடைந்தனர். கருப்பையா மற்றும் அவருடன் தண்டாரோ போட்ட முருகேசன் ஆகியோரை இனத்தைச் சொல்லி இழிவு படுத்தியதுடன், மலம் தின்னவைத்து கொடூரம் செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் உத்தரவில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ராஜலட்சுமி, அவரது கணவரான தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் உறவினர்கள் உட்பட எட்டு பேர் மீது வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாஜி தலைமையாசிரியர் சுப்பிரமணியம் மட்டும் குற்றவாளி எனத் தீர்ப்பு கூறப்பட்டது. மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நன்றி தினமலர்

4 comments:

Anonymous said...

பார்ப்பனர்களை அடிக்க திராவிட இயக்கத்தால் உபயோகிக்கப்பட்ட கருவிகள்தான் தலித்துகள்.

அதற்கு மேல் அவர்களுக்கு உரிமை கொடுப்பதை திராவிட இயக்கம் விரும்பியதில்லை.

Anonymous said...

pathilukku 1000 Rs. NeedhimanRaththileye paNam katti melsaathi Aalukku antha thalith thozar malam pukatta NeedhimanRam oththukkoLLumaa?

Anonymous said...

ஐம்பதாண்டு கால திராவிட கழக ஆட்சியில் ஏன் இன்னமும் இது போன்ற வன்கொடுமை நடக்கிறது?

ஏன் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இது போன்ற வன்கொடுமைகள் இல்லை. இருந்தாலும் மிகக்குறைவானவையாகவும், கடுமையாக தண்டிக்கப்படுபவையாகவும் இருக்கின்றன?

மகாராஷ்டிரத்திலோ, ராஜஸ்தானிலோ, டெல்லியிலோ மத்திய பிரதேசத்திலோ, கர்னாடகத்திலோ நடக்காத விஷயங்கள் ஏன் பாஜக ஆட்சி ஆட்சி செய்யாத தமிழ்நாட்டில் நடக்கின்றன?

சிந்தித்து பாருங்கள்.

எழில் said...

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி பாஜக அனுதாபி