கிறிஸ்துவர்கள் என்ற மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உண்மை என்று நம்பும் புத்தகத்தில் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் யாஹ்வே என்ற யூத தெய்வம் சாத்தானிடம் இனி உடலால் தான் ஊற வேண்டும் என்று பாம்பிடம் சாபம் கொடுத்ததாம். அதனால்தான் பாம்புகள் கால்கள் இல்லாமல் இருக்கின்றனவாம்.
ஆனால், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே பாம்புகள் கால்களை இழந்துவிட்டன. பரிணாமவியல் காரணமாக அவை கால்கள் இல்லாமல் ஊர்ந்து செல்வனவாக மாறின என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆனால், பரிணாமவியலை கிறிஸ்துவர்கள் ஒப்புகொள்வதில்லை. யாஹ்வே “அப்படி அப்படியே:”படைத்தார். அதற்கப்புறம் மனிதர்களோ அல்லது விலங்குகளோ மாற்றமடையாது என்று இவர்கள் அறிவியலுக்கு எதிரியாக யூதர்களின் பழங்கால புராணக்கதையை கட்டிகொண்டு அழுகிறார்கள்.
பைபிள் என்பது பொய், அது ஒரே புழுகு மூட்டை, அறிவியல் தெரியாத பழங்குடிகளின் கதைகள் என்று ஒவ்வொரு நாளும் அறிவியல் நிரூபித்துகொண்டே இருக்கிறது.
யாஹே தெய்வம் பாம்புகளுக்கு கால்களை எடுத்துவிட்டதும், எல்லா பாம்புகளுக்கும் கால்கள் இல்லாமல் ஆகியிருக்க வேண்டுமல்லவா? அப்படித்தான் இல்லை. கால்கள் இருக்கும் பாம்புகளும் இருக்கின்றன.
பல பாம்பு வகைகளுக்கு கால்கள் உண்டு. மனித உடலில் உபயோகப்படாத அப்பெண்டிக்ஸ் இருப்பது போல எல்லா பாம்புகளுக்கும் மறைவாக கால்கள் உண்டு. சில வேளைகளில் அவை பெரியதாகவும் வளர்ந்துவிடும்.
அதே போல பல்லிகள் பல கால்கள் இல்லாமல் பிறப்பதும் உண்டு. கால்கள் இல்லாத பல்லி இனமும் இருக்கிறது
http://en.wikipedia.org/wiki/Legless_lizard
கால்களுடன் பாம்பு! லெபனானில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
கால்களுடன் பாம்பு! லெபனானில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
புதன், 09 பெப்ரவரி 2011 11:50
கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது.
இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர்.
சுமார் 19 “இஞ்ச்” நீள முள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.
அந்த எலும்புகள் “1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
2 comments:
நாங்க யாஹ்வே தெய்வம் சொல்லுறத்தான் நம்புவோம் . நீங்க சொல்லுறது எல்லாம் டூப்பு. அஸ்கு புஸ்கு
மிக அருமையான , ஹிந்துகள் படிக்கவேண்டிய ப்ளாக்.
Post a Comment