காத்தான்குடியில் முஸ்லீம் மதவாதிகளிடம் மோதல்
கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பகுதியில் மத விவகாரம் தொடர்பில் முஸ்லீம் மக்களிடம் மோதல்கள் நடந்துவருவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகணாத்தில் உள்ள காத்தான்குடி பகுதி மசூதிகளில் ஐந்து நேர தொழுகைகளை மக்கள் மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளன. சில மசூதிகள் வழமையான தொழுகை நேரங்களை கடைப்பிடித்துவருகையில் காத்தான்குடி மசூதிகளின் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உம்மா மசூதி, பௌலான் மசூதி, பத்துர்லியா மசூதி, அக்ரா மசூதி, மென்னா மசூதி ஆகியன ஐந்துநேர தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தச்சம்பவம் தொடர்பில் முஸ்லீம் அடிப்படை மதவாதிகளுக்கும், சாதாரண முஸ்லீம் மக்களுக்கும் இடையில் காத்தான்குடி பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுவருவதாகவும், ஆனால் அவை தொடர்பில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் காத்தான்குடி காவல்நிலையத்தை சேர்த்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து நேரமும் மசூதிக்குச் சென்று தொழுகையை மேற்கொள்ளவேண்டும் என்ற உத்தரவுகளால் தொழிலுக்குச் செல்லும் முஸ்லீம் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment