Monday, February 21, 2011

ஐரோப்பாவிலேயே பெரிய இந்து கோவில், நெதர்லாந்து நாட்டில் கட்டப்படுகிறது

ஐரோப்பாவிலேயே பெரிய இந்து கோவில், நெதர்லாந்து நாட்டில் கட்டப்படுகிறது


பிரஸ்சல்ஸ், பிப்.21-

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய இந்து கோவில் நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் கட்டப்பட இருக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் 3 கோவில்கள் இருக்கும். வசிப்பிட பகுதியும், சுற்றுலா வளாகமும் இருக்கும்.

3 இந்து குழுக்கள் இந்த கோவில் வளாகத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளன. ஹாலந்து ஸ்பூர் ரெயில் நிலையத்துக்கு பின்னால் இந்த கோவில் வளாகம் கட்டப்படுகிறது. இந்த வளாகத்தில் 45 அபார்ட்மெண்டுகள் கட்டப்படும். இங்கு யோகா, தியான வகுப்பு ஆகியவையும் இயங்கும். இங்குள்ள வசிப்பிட பகுதியில் இந்து அல்லாதவர்களும் தங்கலாம். தி ஹேக் நகரசபை உறுப்பினரான ராஜேஷ் ராம்னேவாஷ் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பை இறுதியாக்கி இருக்கிறார். நெதர்லாந்து நாட்டு மக்கள்தொகையில் ஒரு சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார்கள்.

No comments: