Friday, February 18, 2011

இஸ்லாமிய மதம் பற்றிய கேள்வியில் தவறாக பதிலளித்த பாகிஸ்தானிய மாணவர் கைது- சிறை

இஸ்லாம் பற்றிய கேள்வியில் தவறாக பதிலளித்தால் கூட சிறுவர்களுக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் மட்டும் போகாது, கூட சிறை தண்டனையும் உண்டு.

அமைதி மார்க்கம் எப்படி இருக்கும்னு நினைச்சீங்க?

இஸ்லாமிய மதத்துக்கு எதிராக வினாத்தாளுக்கு பதிலளித்த பாகிஸ்தானிய மாணவர் _
வீரகேசரி இணையம் 2/2/2011 10:50:30 AM
Share


இஸ்லாமிய மார்க்கத்திற்கும், நபிகள் நாயகத்திற்கும் எதிரான கருத்துக்களை தனது பரீட்சை வினாத்தாளில் எழுதிய பாகிஸ்தானின் காராச்சியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முஹமட் சமியுல்லா என்ற 17 வயதான அவர் கடந்தவருடம் ஏப்ரல் மாதத்தில் தோற்றிய பரீட்சையின்போது தனது வினாத்தாளில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஹம்மது நபியை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அந்நாட்டுக் கல்வித் திணைகளத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்தே அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி மக்பூல் மெமோன் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அங்கு கடுமையான சட்டதிட்டங்கள் நிலவுகின்றன.

முஹமட் சமியுல்லாவிடம் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அவர் அளித்த வாக்கு மூலத்தில் தன்னுடைய உறவினர்கள் இருவர் நோர்வேயில் இருந்து விடுமுறைக் காலத்தில் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்துள்ளனர். இதன்போது அவர்கள் இஸ்லாம் பற்றிய தவறான சில கருத்துக்களை தனக்கு தெரிவித்ததாகவும், இதனால் தான் சிறிது குழப்பத்திற்கு ஆளாகியதாகவும் அதன் பின்னரே இவ்வாறு பரீட்சை வினாத்தாளில் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் வயதைக் கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்க வேண்டும் என பல சர்வதேச அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இது பாரிய மனித உரிமை மீறல் எனவும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments: